இப்படிக்கு தமிழ்

என்னைத் தேடியே
உன்னைத் தேடினாய்
என்னைத் தோண்டியே
உன்னை கண்டெடுத்தாய்

என்னைத் தீண்டியே
விரல்களின் விசை புரிந்தாய்

தீண்டும் இன்பம்
இருக்குதென
உன்னைத் தூண்டியவள் நான்

என்னை வாசித்தே
நீ பேசினாய்
என்னை வாங்கியே
நீ சுவாசித்தாய்

என்னைக் கற்றே
எல்லாம் பெற்றாய்
என்னுள் புகுந்தே
மிகுந்து வெளிவந்தாய்

என்னுடன் நடந்தே
நடை அறிந்தாய்
என்னை உரித்தே
உன்னை உடுத்தினாய்

என்னிடம் அமர்ந்தே
முன்னிடம் அமர்ந்தாய்
என்னுள் மூழ்கியே
முக்தி பெற்றாய்

இத்தனையும் தந்த என்னை
எத்தனை முறை
வந்து பார்த்தாய் ?
பள்ளிக்குள் விட்டு வந்தாய்
எட்டி கூட பார்க்க மறுக்கிறாய்
கூடவே கூட்டிப் போவாய் என்று
உன் கூரையில் குமுறுகிறேன்
மேடையில் ஏற்ற வேண்டாம்
வீட்டிலாவது இடம் தரலாமே..!

- இப்படிக்கு தமிழ்

எழுதியவர் : Raymond (27-May-14, 3:48 am)
Tanglish : ipadikku thamizh
பார்வை : 453

மேலே