அமாவாசை

நட்டநடு காட்டுக்குள்ள
ஏற்றிவச்ச திருவிளக்கே !
நாதியத்த பூமிக்கு
ஒளி கொடுத்த நிலவம்மா...!

பட்டமரம் போல் ஒருநாள்
விட்டுபுட்டு போனாயே !
அம்மாவாசை இரவு
உன் அம்மாவோட நினைவா !!

வட்டமான குளத்துக்குள்ள
சுற்றிவரும் உன்முகமும்
எங்கே நான் போனாலும்
பின்தொடர்ந்து நீ வருவே...!

எனைவிட்டு போன நாளில்
உச்சத்தில உன் நினைப்பு
பைத்தியமாய் நானே
தரித்திரமாய் ஆனேன் !!

வளர்ந்து தேயும்
வாழ்கையை போல்
வானம் உயரம் போல்
வளத்தை தந்து பவுர்ணமியானாய் !

மனமுயர்ந்து மலை ஒளி தந்து நீ
மௌனமான நாளில்...
மயக்கமானேன் நான்
இயக்கமெல்லாம் உனைவைத்து
இருளானாய் எதனாலே ...
விழியிழந்த குருடனுக்கும் ஒருநாளோ !

ஒப்பிட யாருமில்லை
ஒப்பில்லா மதியம்மா
வளம்தந்து உலகினிலே
குறையான உடல்கொண்டாய்

நீ தந்த நிறைவை
குறையற்ற மனிதனும்
குறைவாக செய்யாமல்
மதியென பெயர்கொண்டு
மதியற்று கிடப்பதை கண்டு
மறைந்த நாளிதுவோ !!

எழுதியவர் : கனகரத்தினம் (28-May-14, 1:12 am)
Tanglish : amavaasai
பார்வை : 202

சிறந்த கட்டுரைகள்

மேலே