எனது நினைவில் அவள்

ஆயிரம் தச்சர்
கூடி அழகான மண்டபம்
கட்டி அவளுக்காக
கட்டினவன்.............!

கவலைக்கொண்டான்
கண்பட்டு உடைந்த
மண்டபத்தை கண்டு.........!

எங்கோ வெகு
தொலைவில் இருந்து
கொண்டு கால்தடிக்கி
தவறி விழ - தாங்கி
பிடிக்க நினைக்கிறான்...........!

அத்தனை
சுவருகளும் இடிந்து
விழுந்தாலும்........!

உடைக்கப்பட்ட
கல்லிலும் உயிராகக்
கலந்து குரப்பட்டவன்
கண்டுகொண்டான்
கானகத்தில்........!

சுவர்க்கத்தில்
பிறந்தவளோ சுகம்
பேரருவியில்
நினைந்தவளோ .........!

அவளை
அழைக்கிறேன் எனது
உள்ளம்
எனும் வீட்டினில்
குடிபுகுவதற்கு........!

எழுதியவர் : லெத்தீப் (29-May-14, 3:42 pm)
பார்வை : 126

மேலே