நாளைய விடியல் வரை
உன்னை பிரிந்த வேதனை
பற்றிக் கொண்டு எரிகிறேன்
உன்னை என்னோடு வாரியணைக்க...
என்னை மார்போடு அணைக்கும்
எழில் பொங்கும் கவிக்கடலே!!!!
என் ஏக்கம் உணரா
மனித குலம் தூற்றுகிறது
என்னை, அனலை வாரியிறைப்பதாய்...
மதிகெட்ட மக்களுக்கு புரியவில்லை
நான் பற்றிக்கொண்டு எரிவதெல்லாம்
மனையாள் உன்னைப் பற்றிக்கொள்ளவே....
இப்பகலவனின் பத்தினியே
இரைச்சலிட்டு அழுகிறாயே ஏனடா????
ஓ ஓ ஓ....
உன் மனமறியா மனிதகுலம்
கரைதனை கட்டி தழுவவே
கட்டவிழ்த்து துள்ளி எழுகிறாயென
உன்னை அவதூறு பேசியதாலோ???
அடி பைத்தியமே..... நீீ....
எழுந்து எழுந்து வீழ்வதெல்லாம்
எகிறி என்னை அணைக்கத்தான்
என நானறியேனோ என்னுறவே....
எண்ணமெல்லாம் என்னையே சுமந்து
மாலை வரை பொறுத்திரு
என்னையே உனக்குள் ஊற்றி
மடிதனில் மகிழ்ந்து தவழ்ந்து
உன் மார்போடு உறங்கிப்போகிறேன்
நாளைய விடியல் வரை....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
