காதல் களவு

என் இமைக்குள் உனை சிறைப்பிடித்தேன்,
நீ என் கனவுகளைக் குத்தகையெடுத்தாய்!

நான் உன் நிழலை களவாடினேன்,
நீ என் பாதைகளை தடம்மாற்றினாய்!

உன் புன்னகைக்கண்டு, நான் வண்டானேன்,
உன் பெயர் அன்றி, என் மொழிகள் வற்றிப்போயின!

கண்ணாடிபோல், கண்மூடியும் உன் முகம் தெரிந்தது - சிலிர்த்தேன்!
கண்ணீரிலும் தெளிவாய் தெரிவாய் என்றுணர்த்தினாய் - விழி வியர்த்தேன்!

காதல்... களவு தானோ? எனில் களவு போனது யாது?
சிந்தனை செய்ய முடியவில்லை! ஓ, சிந்தனைகள் தானோ?

காதல்...களவாயின்....
களவும் கற்று மற!

எழுதியவர் : வைரன் (31-May-14, 10:50 pm)
Tanglish : kaadhal kalavu
பார்வை : 399

மேலே