நண்பனுக்கு பிறந்தநாள்
கவிதைக்கு கவியின் வருடல்
------------------------------------்
கவி இன்று பிறந்ததோ
களிப்புற்று களைபடைந்ததோ
தலைகவியிலிருந்து தனியோடி
தனிப்பாதை அமைத்ததோ
தயக்கமுடனே படைக்கிறேன்
தாய்தமிழுக்கு இழுக்காய்
மாறதிருக்க நினைக்கின்றேன்
வாழிய நீவீர் வாலியரே
உம் வழியில் சந்தித்த
நல் நட்பிதுவே
அகண்ட காவிரியாய் பயணிப்போம்
வறண்டிடாமல் சுரந்திருப்போம்
வழிநெடுக பாக்கள் தூவி
தமிழினம் பூக்கள் தூவி
வரவேற்க வழிசெய்வோம்
நன்னீரானாலும் சங்கமித்தால்
கண்ணீர் வரச்செய்யும்
தடை உடைப்போம்
தைரியத்தை நெஞ்சுக்கு உரமாக்குவோம்
தன்னலம் கருதா நதிபோல் நாமும்
மண் நலம் காக்க வாழ்ந்திடுவோம்
துவிச் சக்கரமாய் சுழலுவோம்
வா நண்பா வாழ்த்துகள் உமக்கு
நீ வாழும் வாழ்க்கை எமக்கு ...!!
மலர் பூ அல்ல வாழ்த்த
மனமலர்ந்து வாழ்த்துகிறேன்!!