டிக்கெட்

நிறைமாத கர்ப்பிணியாய் நகர்ந்து வரும் பேருந்தினுல் ,லாவகமாக கூட்டத்தில் புகுந்து டிக்கட் போட்டுக்கொண்டிருந்தார் கண்டக்டர்.மாநகர ,நகர்ப்புறப் பேருந்து போல் கிடையாது கிராமப் புறங்களில் ஓடும் பேருந்துகளில் பணி புரிவது .பொதுவாக கிராமப்புறப் பேருந்துகளில் டிரைவர்,கண்டக்டராக இருப்பவர்கள் ஜனரஞ்சகமாக இருப்பார்கள்.ஊருக்கு வரும் நேரத்தைப் பொறுத்து பஸ்சின் பெயரும் அங்கு மாறும்.எட்டு மணி பஸ்,பத்து மணி பஸ் ,கடைசி வண்டி ,முதல் வண்டி என்று .அநேக மக்களும் இவர்களுக்கு பரிட்சயமானவர்கள் .
என்ன அத்தாட்சி மகளை பேறுகாலத்துக்கு கூட்டிட்டு வாரியா?அண்ணன எங்க? நீ மட்டும் போற ?இந்தா சீட்ட பிடி...ஆத்தா கூடைய சீட்டுக்கு அடில.. வை ..லக்கேஜ் கேட்டா ..உங்க அப்பன் வீட்டு காரான்னு கேக்குரையே ..நீ உங்க அப்பன் வீட்டு வண்டி மாறி சீட்ல வச்சுருக்க ..ஹோல் டன் ஆள் இறந்குதுனே ... போகட்டும் ரைட் ..பெருசு டிக்கெட் எடுத்தட்டயா ?அண்ணே பெருசுதான் எல்லாரும் டிக்கெட் வாங்காம நான் வாங்க மாட்டேன்னு உக்கார்ந்திருக்கு பின்னிருந்து நக்கல் குரல்...ஹோல் டன்...அண்ணே நம்ம பேச்சியம்மா மாதிரி தெரியுது ...வண்டிய நிறுத்து ...என்று விசில்அடித்தார் கண்டக்டர்...எண்ணத்தா மகன், மருமக,மக,மருமகன் பேரன் பேத்தின்னு குடும்பமா வாறீங்க ..பாட்டையா கோயில்ல சாமி கும்பிட்டுட்டு வரோம்யா ..இந்தா துன்னீரு..என்ன ஆத்தா துன்னீரு தானா கடா கஞ்சி இல்லையா ஸ்டேரிங்க திருப்பியவாறு டிரைவர் கேட்டார்.வா பொழுசாய வீட்டுக்கு வா தின்னுட்டு போ ...டேய் எந்திரிட ஆத்தா உக்காரட்டும் ..என்று சீட்டில் உட்கார்ந்திருந்த சிறுவனை எழு ப்பிவிட்டார் டிரைவர்..மற்றவர்கள் உள்ளே சென்று விட்டனர் பெரியமகன் டிக்கெட் வாங்க பணத்தை எடுக்க அவன் மணைவி தடடுத்தால் ..வரும்பபோதுதான நீங்க எடுத்தீங்க ..உங்க தம்பி எடுக்கட்டும் இல்ல உங்க தங்கச்சி எடுக்கட்டும் .நீங்க பேசாமா இருங்க ...அக்கா எங்களுக்கு நாங்க டிக்கெட் எடுத்துடுறோம் ...கூட்டத்தின் நடுவில இருந்து வந்தது சின்னமருமகளின் குரல் .பாரு அவ எப்டி பொழைக்கிறானு நீயும் இருக்கியே முனுமுனுத்தாள் தனது கணவனை பெரிய மருமகள் ..என்னடி உண்கண்னங்க சத்தத்த யே காணோம் ..எங்க வாய தெறந்த டிக்கெட் எடுக்க சொல்லிருவாங்கன்னு ஒளிநஞ்சுட்டாங்களா?நமக்கு மட்டும் எடு போதும் ....கெழவிக்கு அவுன்கெ எடுக்கட்டும் ....தன் மனைவி காதில் முனுமுனு த்தான் மருமகன்...கண்டக்டர் சீட்டு....... சீட்டு ....சீட்டூ......என்று கேட்டு அவர்களை எல்லாம் கடந்து சென்று படியில் நின்றார்..என்ன கண்டக்டர் டிக்கெட் வேணாமா?நீ பாட்டுக்கு போய் நின்னுட்ட .....என்று கேட்டார்கள்..உங்க எல்லாருக்கும் சேர்த்து அப்பவே ஆத்தா எடுத்துருச்சுப்பா ....எந்த சலனமும் இல்லாமல் பேச்சியம்மாள் சுருக்கு பையில் இருந்து வெத்தலை எடுத்து மெல்ல ஆரம்பித்தாள் .........
பின் சீட்டில் இருந்து ஒரு குரல் பெரிய மனுசி ...பெரிய மனுசிதான் யா என்று ஒலித்தது
பார்த்திபன் @திலீபன்