அழகென்ற சொல்லுக்கு

" அழகென்ற சொல்லுக்கு !! "

முகபொலிவு கூட்டி
ஒரு பயனுமில்லை!
அகப்பொலிவு கூட்டுங்கள்
உங்கள் மதிப்பு உயரும்!

வாசனைசேர்த்து உங்கள்
வாசமிழக்க தேவையில்லை!
வாஞ்சையோடு வேலைசெய்தால்
வாழ்த்துமுள்ளம் வந்துகூடும்!

உதடுவிரித்து மனதைமூடி
உதட்டுநகை வேண்டியதில்லை!
உள்ளன்போடு புன்னகையுங்கள்
உங்கள் அழகுபெருகும்!

மிடுக்கு உடை மினுக்கு நகை
அள்ளியணிய தேவையில்லை!
நேசம்பேசி நட்புகொண்டால்
நாடே உம்மை பேசும்!

உடலழகு நடையழகு
உலகை மயக்கும்
உடல்தூய்மை உளத்துய்மை
உலகை வெல்லும்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (5-Jun-14, 8:19 am)
பார்வை : 351

மேலே