இளையராஜா
சின்னத் தாயின் மடியில் இருந்து
ஒரு ராகம் பிறந்தது
ஏழிசை ஸ்வரங்களில்
ஏழை இசை மலர்ந்தது
வறுமைப் பிறவிகளில்
வண்ண இசை விழுந்தது
வருங்கால சங்கீத
வசந்தம் மலர்ந்தது
முரட்டு மூங்கிலில்
முல்லைக் கோடி படர்ந்தது
முகரி ராகம்
மூச்சிழந்து போனது
பண்ணை புறத்து பழைய நாணல்
புதிய பாதை இட்டது
பரம்பரை சங்கீதம்
உயிரோடு பிறந்தது
பசித்து அழும் பாங்கான வயிறு
வீணையை விற்றது
பாட்டுடை வர்க்கம்
பாதியில் நின்றது
இயற்கை இசை அன்னை
இறுதிச் சடங்கு ஆனது
இருந்தவர் இசைத்தவர்
இதோடு தீர்ந்தது
மெல்லிசை மெட்டு
மெதுவாக ஒய்ந்தது
அனைத்தும் முடிந்த பின் தன
அன்னக்கிளி பிறந்தது
அன்னையை மட்டும் தான்
அது பாடி இருந்தது
அழிவில்லா ராகம் ஒன்று
ஆண்டவனால் எழுந்தது
அறிவான கலை உலகம்
அவரால் தான் ஒளிர்ந்தது
அவருக்கு பிறந்த நாளாம்
அங்கமே குளிர்ந்து
அடுத்தடுத்த தலைமுறையும்
அவரால் தான் சிறக்குது
அந்த அதிசய ஞானிக்குள்
அகிலமும் அடங்குது!!!!!!!!!!!!!!