ரத்து விவாகம்

கோபத்தின் கொதிகலனில்
சூடான எண்ணெயாய்
மூடனான போதென்னில்
கடுகாகி ஏன் விழுந்தாய்
என்னவளே!

பணம் செய்யும் பத்தும்,
அந்தப்
பத்தும் இனிக்கச் செய்யும்
பத்தினியே!

ஆணுக்குப் பெண் நிகர் என்பதாலே
அவசரப்பட்டாயோ என்னைப்போல்
அறிவிழந்து ஆத்திரப்பட்டாயே!

ரத்து செய்த விவாகத்தை
ரத்து செய்ய வழியுண்டோ? என்
சொத்தான பத்தினியே!

ஏங்குகிறேன் நானிங்கே
மணவாட்டி உன் நினைவில்
மனம் வாடி நிற்கின்றேன்!

என்குற்றம் என்று நீயும்
உன்குற்றம் என்று நானும்
கண்ணிருந்தும் குருடாகிப்
போனதும்தான் ஏனோ?

நம் குற்றம் என்று நாம்
நினையாத குற்றமே!
கண்கெட்ட பிறகு
கதிரவனைக் காண்பேனோ?

எழுதியவர் : உமர் ஷெரிப் (6-Jun-14, 1:37 pm)
Tanglish : ratthu vivagam
பார்வை : 120

மேலே