நரகம்

இறந்தபின்புதான் நரகமென்பார்
ஆனால் இருக்கும்போதே
நரகத்தை காண்கிறேன் -
இருதயமில்லாத மனிதர்களிடத்தில் .......

சுயநலத்தையே
லட்சியமாய் கொண்டவர்களிடத்தில்
சூழ்ச்சிக்கு
பஞ்சம் இருக்குமா ?

பிறர் நலனை தவிர்த்து
தன்னலத்தை தேடும்
சுயனலவாதிகளிடத்தில்
நியாயங்கள் எப்படி வாழும் ......

உயிருக்கு போராடும்
மனிதனிடத்தில் உடமைகளை திருடும்
கேவலமான மனிதர்கலோடுதான்
உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது ...........

பணத்தைமட்டும் சேர்த்துக்கொண்டு
பாசத்தை குப்பையில் வீசும்
அலட்சிய மனிதர்களிடம்
அன்பை பார்க்க முடியுமா ........

துரோகத்தில் தொயந்துவிட்ட
துரோகிகளின் உறவுகளால்
இருதயமே வெடித்து
பஞ்சாய் போனதுதான் மிச்சம் ........

பாம்புக்கு பால்வார்க்கும்
பகட்டு பக்தர்களிடத்தில்
பச்சைக்குழந்தைகளின்
பசிக்குரல் ஏன் கேட்காமல் போனதோ ........

மரங்கலுக்குகூட ஆடைகட்டி
அலங்காரப்படுத்தும் பெண்களுக்கு
ஏழைப்பெண்களின் கிழிசல்
தெரியாமல்போனதுதான் கேள்வி .......

மிச்சங்களை கூட
எட்சங்கலாக்குவதால்
குப்பைக்கூடமே கூடாரமாகிவிட்டது
எத்தனையோ ஏழைகளுக்கு .......

வேலைக்கு கூலி பார்த்திருக்கிறேன்
இங்கே கொலைக்குகூட கூலியா
என்ன ஒரு விசித்திரமான
நரக உலகம் .......

இறக்கம் அன்பு கருணை
என எல்லாம் மறந்து
இருதயமற்ற மனிதர்களே வாழும் உலகத்தில்
இன்பம் எங்கே இருக்கிறது ......

இது கூட
ஒரு வகையில் நரகம்தான் ........

எழுதியவர் : வினாயகமுருகன் (6-Jun-14, 1:35 pm)
Tanglish : narakam
பார்வை : 422

மேலே