இலைகளை அசைத்து ஹைக்கூ

*

எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்
பருவமழை தொடங்கி வி்ட்டதா?
மேகமூட்டமாயிருக்கிறது வானம்.
*
கருத்து வருகிறது மேகம்
குளிர்க் காற்றில்
பறந்து திரிகின்றன ஈசல்கள
*
பருவமழையை
மரங்கள் வரவேற்கின்றன
இலைகளை அசைத்து…
*
உயர்ந்தும் தாழ்ந்தும் மிக
வேகமாய வருகின்றன
ஆர்பாட்ட அலைகள்.
*
சேமித்துக் கொள்கிறது
மழை நீரை
வளமான பூமி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Jun-14, 9:04 am)
பார்வை : 139

மேலே