வளம் நிறைந்த கடல் சென்ரியு

*
இயற்கையின் கொடை
மீனவர்க்கு வாழ்வளிக்கும்
வளம் நிறைந்தக் கடல்.
*
இரக்கமில்லா இயற்கையே
ஏழைகளை ஏன் படைத்தாய்?
ஏழ்மை ஒழிக, ஏழைகள் வாழ்க.
*
பூவுலகின் சிறுவர்கள்
சிறகு விரித்துப் பறக்கும்
கள்ளமில்லாப் பறவைகள்.
*
கவிiதைகள், பாடல்கள் அழிவதில்லை
தினந்தினம் காற்றினில் மிதந்து வரும்
இசையில் வாழ்கிறாய் முத்தைய்யா.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Jun-14, 9:48 am)
பார்வை : 195

மேலே