சாளரத்தின் தோரணம்
..."" சாளரத்தின் தோரணம் ""...
சாளரம் தென்றலுக்கான
வாயிலது கோடிகள் கொட்டி
கோட்டையே கட்டினாலும்
சாரள ஒட்டையின்றி முழுமை
அழகினை பெறுவதில்லை
எதிர் வீட்டில் காதலிக்கு
சாரளமொரு அஞ்சப்பெட்டி
சட்டைசெய்யா சாளத்திற்கும்
அழகாய் ஆடையணிந்து தன்
ஆடம்பரத்தை தெளிவாய்
காட்டுவதைப்போல் சிலர்
சாளரத்தின் காற்றோட்டம்
சட்டைக்குள்ளும் வந்துபோக
அங்கங்கள் மறைக்கும்
ஆடைகளில் சாரளங்கள்
அமைத்தே சதைகாட்டி
"அ"நாகரீகமென சொல்லி
தெருக்களில் அலைகிறார்
சாளரத்தின் கவலையெல்லாம்
முதிர்கன்னிகளின் முத்தமிடும்
கண்ணீரால் சாரளமும் சங்கடப்பட
சண்டாள மனிதர்களே !!!!???
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

