விதியின் விளையாட்டு35

ஷிவானியின் நினைவில் சோர்ந்து வலுவிழந்து காணப்பட்ட மனோஜை பார்த்ததும் திடுக்கிட்டு அழுது விட்டாள் ரிஷானி.......

இப்படி ஒரு நிலைமை நம்ம குடும்பத்திற்கு வந்து விட்டதே என்று துடித்தாள் அக்கா இறந்து இந்த உலகை மறந்தே போய் விட்டாள் ஆனால் அத்தான்??உயிரோடிருந்தும் இறந்தமாதிரியான நிலையிலிருக்கிறாரே என விக்கித்தாள்.....!

மெல்ல நடந்து மனோஜின் அருகில் சென்றவள் அத்தான் அத்தான் என்று அழைத்தாள் எந்த வித அசைவுமின்றி இருந்தான் மறுபடியும் தன கையால் அவனை தட்டி எழுப்பினாள்......

நிமிர்ந்தவன் ரிஷானியை பார்த்தவன் மெல்ல எழும்பினான்.

என்னம்மா எப்போ வந்தா என்று விசாரித்தான் வாங்க அத்தான் சாப்பிடலாம் என்றாள்...??...

எனக்கு பசிக்கல நீ சாப்பிடு என்று அனுப்பி வைத்தான்........

நீங்க சாப்பிடலன்னா நானும் சாப்பிடமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றாள் ரிஷானி!

அவளின் பிடிவாதத்தால் வேறு வழியின்றி படுக்கையை விட்டு எழும்பியவன் "நீ போ நான் குளித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு குளியலறைக்கு சென்றான்....

மனோஜின் அம்மாவிடம் வந்து "அத்தை எல்லாருக்கும் சாப்பாடு போடுங்க" அத்தான் இப்போது வருவார் எறு சொல்லி விட்டு உட்கார்ந்தாள்......!

மனோஜின் தாய் பெருந்தன்மையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ரிஷானியை....

ஜோசியரை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்ததும் ரிஷானி சந்துருவின் திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்தனர் சந்துரு குடும்பத்தினர்....!

வேண்டாம் என்று உடனே நிராகரித்தார் ரிஷானியின் அப்பா.

என்ன அண்ணா அன்னிக்கு சரின்னு சொன்னீங்க இப்போ ஏன் இப்டி பேசுறீங்க என்று கோவமானாள் அவள்????

ஒரு பெண்ணை இழந்தது போதும் அடுத்தவளையும் இழக்க தயாராக இல்லை ஜோசியர் சொல்கிற படிதான் கேட்கணும் என்று பதிலளித்து விட்டு அங்கிருப்பவர்களின் பதிலை எதிர்பாக்காமல் ரிஷானியை அழைத்து வருகிறேன் என்று தன் மனைவியிடம் சொல்லி விட்டு மனோஜின் வீட்டிற்கு சென்றார்......!

மனோஜின் வீட்டிற்கு சென்றவர் அங்கு ரிஷானியும் மனோஜ் குடும்பத்தினரும் சோகமாய் இருந்தாலும் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தார்.

உள்ளே சென்றவர் சிறிது நேரம் பேசிவிட்டு நம்ம ஜோசியரை பார்க்க சென்றேன் என்று மனோஜின் தந்தையிடம் சொன்னார்?

ஜோசியம் எல்லாம் பொய் அதெல்லாம் ஏன் நம்புகிறாய் என்று எரிச்சலுடன் கேட்டார்....

இல்லடா! உண்மை தான் நான் அனுபவித்து விட்டேன் இனியும் பொய்யென்று ஏமாறவேண்டாம் உடனே மனோஜின் ஜாதகத்தை தா நாளைக்கு நாமிருவரும் ஜோசியரை பார்க்க செல்கிறோம் என்று திட்டவட்டமாக கூறினார்........!


விதி தொடரும்.......

எழுதியவர் : ப்ரியா (9-Jun-14, 4:40 pm)
பார்வை : 273

மேலே