புரிதலோடு பக்குவப்படுவோம்
முழு நிலவும்
இடம்பெயரும்
நிலைகொண்டு
வெளிகொணர் உருவத்தில்
குறைகொண்டே தெரிகிறது..
தேய்நிலவென்று..!
மனித அன்பும்
உயிர் இணை
குணம் கொண்டும்
மிளிர்ந்திடும் அழகதில்
களங்கமாய் தெரியலாம்..
புரிதலின்றி..!
வாழ்க்கையில்
பழகியபின் தோற்று
போனால் அது உனக்கு
அனுபவ பாடம்..
பழகாமல் நீ விலகி
போனால் அது உந்தன்
கோழைத்தனம்..!
வாழ்க்கையை பழகிட..
கெட்டதையும் கற்று மற
நல்லதையும் உற்று நினை..
இரண்டிலும் நன்மை இருக்கு..!
...கவிபாரதி...

