தொல்காப்பியமும் மரபியல் கோட்பாடும்

முன்னுரை :
மரபு என்பது நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற அனுபவக்கூறு,நெறிசார்ந்த வாழ்க்கைக்கொட்பாடு என்பதாம்.மரபென்னும் சொல்லுக்கு சான்றிலக்கணமாய் விளங்குவது தொல்காப்பியம்.எழுத்து,சொல்,பொருள் இவை யாவற்றுக்குமான மரபை வகுத்துக்கொடுத்தது என்னும்பெருமைதொல்காப்பியத்தைச்சாரும்.மரபை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள்பலவாகும்.மரபென்பதுகாலங்காலமாய் மாறாதது என்னும் கோட்பாடாகும்.தமிழிலக்கியம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மரபைத்தழுவிய நிலைப்படுடையது.இன்றுள்ள பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் இருபது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது.பெயர் மரபை எவ்வளவில் பதிவுசெய்திருக்கிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
பெயர்:
பெயர் உலகுயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது.உயிருள்ளது, உயிரற்றது என்னுமிவற்றை பெயர்தான் அடையாளப்படுத்துகிறது.திணை என்னும் சொல்கொண்டு அறிவினால் சிறந்த மனிதன்,கடவுள் இவற்றை உயர்திணை என்றும் ஏனையவற்றை அல்திணை என்றும் குறித்தமரபு தொல்காப்பியத்தது.உயர்தினைப்பெயர்கள் அதன் பிரிவு அவற்றின் பல்வேறு தொகுதிகள்,அல்தினைப்பெயர்கள் அதன் பிரிவு அவற்றின் பல்வேறு தொகுதிகள் என ஒவ்வொன்றிற்கும் முறையான கட்டமைப்புடையது தொல்காப்பிய பெயர் மரபுக்கோட்பாடு.
இளமைப்பெயர்கள்:
பருந்து,கிளி,ஆமை, உடும்பு,முதலை,கீரி,பூனை,எலி,அணில்,நாய்,பன்றி,புலி,முயல், நரி,ஆடு, குதிரை,நவ்வி,உழை, கவரி,கராம் ஒட்டகம்,குஞ்சதம்,ஆ,எருமை,மூசு,வூகம்,மக்கள் ஆகியவற்றின் இளமைப்பெயர்களை பார்ப்பு,குட்டி,குருளை,கன்று, பிள்ளை,மகவு, மரியாகிய எட்டும் அல்தினைக்குரியதும் குழவியொடு ஒன்பதுமாகிய உயர்திணை இளமைப் பெயராக வரும் என்கிறார்.நெல்லும் புல்லும் இளமைப்பெயர்கள் பெறாது என்கிறார்.
ஆண்பால் பெயர்கள்:
களிறு,புல்வாய்,புலி,உழை,மறை,கவரி,கராம் யானை,பன்றி,எருமை,பெற்றம்,சுறா, முதலை,இடங்கர்,வரால்,மயில் வல்லூறு, இரலை, கலை,ஆடு,ஆண்பறவை,புலி,செந்நாய்,முதலை போன்றவற்றின் இளமைப்பெயர்களை ஏறு,ஏற்றை,ஒருத்தல்,களிறு,சேவல், இரலை,கலை, மொத்தை,தகர்,உதள்,அப்பர், பொத்து,ஆண்,ஒருவன் ஆகியன ஆண்பாலைக் குறிக்கும் இளமை மரபுப் பெயர்களாகும்.
பெண்பால் பெயர்கள்:
யானை,ஒட்டகம், குதிரை,கழுதை, மரை,பறவைகள்,கோழி,கூகை,மயில்,புல்வாய்,நவ்வி,உழை,கவரி,பன்றி,நாய்,பெற்றம், எருமை,நந்து,ஆடு,மூசு கடமை,நரி,குரங்கு மூசு,வூகம் ஆகியவற்றின் இளமைப் பெயர்களை,பேடை,பெடைவேட்டை,பெண்,மூடு, நாக்கு, கடமை, அளகு,மந்தி, பாடி,பிணை,பிணவு, பிடி,ஆகிய பதின்மூன்றும் பெண்பாலைக் குறிக்கும் இளமை மரபுப் பெயர்களாகும்.
உயிரின வகையியல்:
ஒவ்வோர் உயிரின் அறிவின் அளவிற்கேற்ப எவ்வகை உயிரென கோட்பாடு மொழிந்தது,தொல்காப்பியரின் அறிவியல் நுண்மையை உணர்த்தும் சான்றாம்.ஓரறி உயிர்முதல் ஆறறி உயிர்வரை ஒவ்வொன்றிற்கும் பெயர் வகையை பால் வேறுபாட்டுடன் தொல்காப்பியம் குறித்துள்ளது.
ஓரறிஉயிரி என்பது தொடுவுணர்றிவு உடையது புல்புற வைரமும் மரம் அக வைரமும் உடையது.மரங்களின் உறுப்புப் பெயர்கள் இல்லை,தளிர்,சினை,குழை,பூ,அரும்பு,நனை என்றும் புல்லின் உறுப்புகள் தோடு,மடல், ஓலை,ஏடு,இதழ்,பாளை,ஈர்க்கு,குவை என்பதாகும்.இவை இரண்டிற்கும் பொதுவானவையாக காய்,பழம்,தோல்,செதிள்,வீழ் போன்றவை ஆகும். மெய்யுணர்வோடு நாவுர்வு கூடியது ஈரறிவுயிர் என்பதாம்.அவற்றுடன் மூக்கின் நாற்றமுணரும் அறிவு நாலறிவுயிர் என்பதாகும்.அவற்றோடு கண்ணின் அறிவினையுடையது ஐந்தறிவுயிர் ஆகும்.இத்தகைய அறிவுடன் மனவறிவு உடையது மனிதரும் தேவரும் என்பதாகும்.
இணமரபு:
அரசர்,அந்தணர்,வணிகர்,வேளாளர்என்னும் நான்கு பிரிவுகள் பற்றியும் அவரவர்க்குரிய கடமைகள் என்னென்ன என்பதையும் தொழில்,அவர்கள் சார்ந்த நிலைப்பாடு, அவரவர் ஒழுக்கம் ஆகியனவற்றையும் வேளிர்கள் குறுநில வேந்தர்கள் அகியனவர்களையும் அவர்களின் மரபுகளையும் தொல்காப்பியம் பதிவு செய்கிறது.
மூலக்கூறு கோட்பாடு:
நிலம்,நீர்,வளி,தீ,ஆகாயம் என்ற ஐம்பெரு மூலக்கூறுகள் கலந்த கலவைதான் இவ்வுலகம்.இம்மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கிறது.இவற்றின் பிணைப்புதான் உலக இயக்கம்,நெறி என்பது இவ்வுலக இயக்கக்கொட்பாட்டிலேயே உள்ளது.இவ்வுலக இயக்கம்போல் நெறி என்பதும் கோட்பாடு என்பதும் மாறாதது.இவற்றைப்போலவே நெறிப்பட யாவற்றையும் கூறவேண்டும் என்கிறார்.இவ்வாறு கூறுவதற்கு இதுவரை வழங்கி வந்த மரபே காரணம் என்கிறார்.இருதிணை ஐம்பால் கோட்பாடும் அத்தகையதே ஆகும்.
நூல்மரபு:
பெயர் மரபு,திணை மரபு,பால்மரபு ஆகியனவற்றைப்போல் நூலின் மரபும் நுவலப்படுகிறது.
" மரபு நிலை திரிதல் செய்யுட்கில்லை
மரபு வழிப்பட்ட சொல்லினான"
என்று மரபு நிலை திரியாதவாறு நூல் அமைக்க வேண்டும் என்று அவற்றின் மரபை விளக்குகிறார்.முதல் நூல் வழிநூல் என்பதும் அவ்வாறே.
முடிவுரை:
மரபு என்பது மாறாதது.
செய்யுளில் சொல் மரபு மாறக்கூடாது.
பொருள் மரபு மாறும் இயல்புடையது.
சொற்கள் மரபு திரிதல் கூடாதது.
திரிந்த வழக்குகளையும் பதிவு செய்திருக்கிறார் தொல்காப்பியர்
வழக்கிலும் செய்யுளிலும் காணப்படும் பெயர் மரபு மரபியலின் தொடக்கமாக அமைந்து மக்களுடன் விலங்கு,பறவை,நீர்வாழ் உயிரி,ஓரறிவு உயிர் முதற்கொண்டு ஆறறிவு வுயிர் ஆகியவற்றின் பெயர் மரபுகளை பட்டியலிடுகின்றது.
மரபியியலில் இளமை பெயர்,ஆண்பால் பெயர்,பெண்பால் பெயர்,ஓரறிவுயிர் பெயர்முதல் ஆறறிவுயிர் பெயர்வரை இயம்புகிறது.

எழுதியவர் : சு.விமல்ராஜ் (10-Jun-14, 3:31 pm)
பார்வை : 985

மேலே