சலனம்

தனக்குத் தானே
லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம்
ஏரியினுடையதே

கால்சதங்கை கட்டிச்செல்லும்
காட்டு நதி
நதியின் சலனம்
நதியினுடையதே

காலையின் கூட்டிசையில்
கருங்குயில்
குயிலின் சலனம்
குயிலினுடையதே

துளிநீரில் சிறகடிக்கும்
சிட்டுக்குருவி
குருவியின் சலனமும்
குருவியினுடையதே

நான் மட்டுமேன்
சலனப்படுகிறேன்
என்னோடும் உன்னோடும்
அவனோடும் இவனோடும்....? (1997)

(('கடவுளின் நிழல்கள்' நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (11-Jun-14, 8:54 pm)
பார்வை : 340

மேலே