அழகாய்த் தொலைந்தேன்

என் வீட்டுக்குக்
கண்ணாடி தோற்றுப் போனது
ரசனையில் ..நீ
ரசிகன் ஆனதால் //

என் விழி
படிக்கும் வாசகன்
நீ என்றானாய் ,என்
இதயம் வசிக்க
வேறிடம் பார்த்துவிட்டது //

அழகிய பொய்களால்
புதையுண்டேன் ,
சொன்னது நீ என்பதால் //

நிஜமாய்க்
காதலிக்கிறேன் ,
உன் நிழலையும் கூட//

உன் அழைப்பில்
பனிப் பூவாய்ச்
சிதறிய இதயத்தைக்
கோர்த்து எடுக்கிறேன்
உனக்குப் பரிசளிக்க//

ஓடும் நொடிகளை
நிறுத்தப் பார்க்கிறேன் ,
நீ என்னருகில்
இருந்தால் //

தொட்டுச் செல்லும்
காற்றிலும் காதல்
வாசம் நம்மைத்
தழுவிச் சென்றதால் //

எழுதியவர் : கார்த்திகா AK (14-Jun-14, 1:51 pm)
பார்வை : 257

மேலே