புது யுகம் அழியும் இயற்கை
புழுதி பறக்கும் மணல் அது
புறவுரு அற்று போகுது
புது யுகம் காணும் உலகிலே
புத்துயிர் கேட்டு தவிக்குது
மலைகள் வெடித்து அன்று
மணல் திட்டு உருவானது
மணல் திரண்டு இன்று
மாட மாளிகையாகுது
எட்டிப்பார்த்த எங்கும் அன்று
பச்ச வயல் விரிந்தது
விட்ட மூச்சை மீண்டும் பிடிக்க
மூலிகை வாசம் தந்தது
கதிரவன் உதிக்க
காலை சேவலும் கூவ
யன்னல் திறந்த போதினிலே
என் மனம் அன்று
இன்று பிறந்தது ஆனது
வானம் தொட போட்டி இன்று
கட்டி கட்டி குவிக்கின்றான்
வாழும் காலம் குறைந்து இன்று
வாழும் வயதில் இறக்கின்றான்
பார்த்த இடமெல்லாம்
பத்திரம் போட்டு எடுக்கின்றான்
பழம் தரும் தரு அதை
வெட்டி வீழ்துகின்றான்
இன்றும் மட்டும் அவன்
வாழ நினைக்கின்றான்
இனிமையாய் வாழ அவனோ
மறந்து தவிக்கின்றான்