இவ்வுலகம் மகிழ்ந்திடுமா
அரிதான காட்சி இது
அழகாய் பார்க்கலாம்
அருமைமிகு காட்சியை
அருங்காட்சியகத்தில் !
விளை நிலங்களே
விலை போனதால்
விவசாயம் இன்று
விடை பெற்றது !
அறுத்திட்ட கதிர்களை
அடுக்கிடுவர் அழகுறவே
அணிவகுப்பர் சுமந்திட்டு
ஆனந்த காட்சியன்றோ !
இன்றைய தலைமுறை
இனி எங்கு கண்டிடும்
இனிதான இக்காட்சியை
இழந்திட்ட பசுமையை !
கண்டு ரசித்தவன் நான்
கண்களிலே நிற்கிறது
கனத்த இதயத்துடன்
காண்கின்றேன் இதனை !
நினைவில் நிலைத்தவை
நிழலாய் நின்றிடுமே இனி
இந்நிலைமை வந்திடுமா
இவ்வுலகம் மகிழ்ந்திடுமா !
பழனி குமார்