யார் பைத்தியம்
பல தொழில் செய்து நட்டத்தை மட்டுமே சந்தித்த ஒருவன் மீதமிருந்த பனத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள கடற்கரைக்குச் செல்கிறான் .கடற்கரையில் அவனைத்தடுத்த கோட்டு போட்ட ஆசாமி தற்க்கொலைக்கான காரனத்தைக் கேட்கிறான் .தான் பலதொழில் செய்ததாகவும் அவற்றில் நட்டம் கண்டதாகவும் மீதியபனத்தை தன்மனைவியின் எதிர்கால சேமிப்பாக வைத்திருப்பதால் அதைக்கொண்டு வியாபாரம் செய்ய பயந்து தற்க்கொலைக்கு முயன்றதாவும் கூறினான் .இதைக்கேட்ட ஆசாமி 40லட்சத்திற்கு செக்கை கொடுத்து வியாபாரம் செய்ய சொல்லி அனுப்புகிறார் .செக்குடன் வீடுதிரும்பியவனுக்கு இதைக்கொண்டு வியாபாரம் செய்து நட்டமடைந்துவிட்டால் என்ன செய்வதென்ற பயத்தில் செக்கை பீரோவில் வைத்துவிட்டு மனைவி பனத்தில் வியாபாரம் செய்துபனக்காரனான பின்பு மீண்டும் கடற்கரைக்கு செல்கிறான் .அங்கு கோட்டுபோட்ட ஆசாமி பலருக்கு செக் கொடுத்துக்கொண்டு பைத்தியமாய் திரிகிறான் .