கடமையை மறந்து காதலிக்காதீர்கள்
எனது கல்லூரி நாட்களில் தோழியாய் இருந்தவளின் வாழ்க்கையை பற்றிய கதை இது .
நான் கணிப்பொறிஅறிவியல் படிப்பில் சேர்ந்திருந்தேன். கிராமத்தில் இருந்து சென்று வந்து கொண்டிருந்தேன். எனக்கு கவிதை, பாட்டு, நாடகம் போன்ற கலைகளில் ஆர்வம் கொஞ்சம் அதிகம். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போது என் வகுப்பில் இரு பெண்கள் எனக்கு தோழிகள் ஆயினர்.
ஒருத்தி பேர் சத்யா, இன்னொருவள் வினோதினி. இந்த கதையே வினோதினி பற்றியது தான்.
வினோ கேரளா மாநிலம், வன்னாமடை கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள். அவளுக்கு விஜி என்று ஒரு தங்கை உண்டு. வினோ கல்லூரியில் சேரும் போது அவள் +1 படித்து கொண்டிருந்தாள்.
உறவுகள் ஏமாற்றியதால் தோட்டம், வீடு, சொத்து என்று அனைத்தையும் உடன் பிறந்தவர்களிடமே இழந்து இரு பெண் குழந்தைகளுடன் நிர்கதியாய் நின்றார் அவள் தந்தை.
மூத்த மகள் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவர் தன் மகளின் ஆசையை நிறைவேற்ற ஊரில் ஒரு வசதியானவரிடம்
கடன் வாங்கி படிக்க வைத்தார்.
அந்த கடனை கட்டுவதற்க்க்காகவும், தங்களின் வாழ்வாதாரதுக்காகவும் சொந்த ஊரை விட்டு கரூர் சென்று ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.
அவளது தங்கை விஜியும் தனது படிப்பை நிறுத்தி விட்டு அக்காவுக்காக அப்பா வாங்கிய கடனை அடைக்க பால் சொசைட்டிக்கு கணக்கெழுதும் வேலைக்கு சென்றாள்.
வினோதினி பொள்ளாச்சியில் ஒரு மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தாள். அந்த விடுதியின் உணவு தரமனாதாக இருக்காது. எனவே என் வீட்டில் இருந்து குழம்பு, ரசம் என்ற எடுத்து சென்று தருவேன்.
வார விடுமுறை நாட்களில் என் வீட்டிக்கு அழைத்து சென்று என் தம்பிகளுடன் பொழுது போக்கி விட்டு திங்களன்று கல்லூரிக்கு சென்று விடுவோம்.
எங்களது நட்பு சந்தோசமாக சென்று கொண்டிருந்தது. நாங்கள் பாடத்திற்கு குறிப்பெடுக்க நகரின் மையத்தில் இருந்த நூலகத்திற்கு செல்வது வழக்கம்.
வினோதினிக்கு அந்த நூலகருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு தெரியவில்லை.
அவள் எங்களுன் பேசுவதையும் குறைத்து விட்டால்.
கல்லூரி படிப்பும் முடிந்தது. அவளும் எங்கோ வேலையில் சேர்ந்து விட்டதாக கூறினாள்.
பிறகு சந்திக்க வாய்ப்பும் கிடைக்க வில்லை
10 வருடங்கள் கழித்து நான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் அவளது தந்தையையும், தங்கையையும் சந்திக்க நேர்ந்தது.
அவர்களிடம் விநோதினியை பற்றி விசாரித்தபோது சொன்ன விஷயம் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. வேற்று மதத்தவரை விரும்பி, கல்லூரி படிப்பு முடித்தவுடன் அவரையே திருமணம் செய்து கொண்டு சென்று விட்டாள்.
ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டதற்கு, எனக்கு பிடித்தவரை நான் திருமண செய்துகொண்டேன். உங்களுகென்ன என்று கேட்டிருக்கிறாள்.
டிகிரி செர்டிபிகேட்ஸ் தர முடியாது என்று சொல்லியிருகிறார்கள். உடனே போலீசில் கேஸ் கொடுத்து சேர்டிபிகட்டை வாங்கி சென்று விட்டாள்.
மனதொடிந்த தந்தை தன் இன்னொரு பெண்ணுக்க வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தாய் ஒரு மன நோயாளி போலாகிவிட்டார். அவளது தங்கைக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர்கள் வாழ்வது கிராமம் என்பதால் யாரும், வேறு மதத்தவருடன் ஓடிப்போனவள் தங்கை என்று திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. 28 வயதாகியும் தன் பெற்றோருக்காக அந்த பெண் விஜி உழைத்து கொண்டிருகிறாள்.
ஒருத்தியின் சுய நலத்தால் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாய் நிற்கிறதே? இது போன்ற காதல்களை என்ன செய்ய?காதலுக்கு நான் எதிரியும் இல்லை. அதனால் கடமையை மறந்த காதல் வேண்டாமே என்பது என் கருத்து.