நல் மக்களாக வளர்த்திடு

ஈரைந்து மாதங்கள் கருவினில்
சுமந்தாய்,
வலியினில் நொந்து பெற்றாய்
மற்றும் ஈரைந்து மாதத்திற்கு
மேலாக, மார்பினில் சுமந்து
பாலூட்டினாய்
ஓரைந்து வருடங்கள் இடுப்பில்
சுமந்து, இடையும் நொந்து
வளர்த்தாய்
அப்படி பெற்று வளர்ப்பதினால்
மட்டும், அன்னையான உந்தன்
கடமை முடிவதில்லை
அன்பும் கொடுத்து, அதனுடன்
அறிவும் கொடுத்து,
நல்லது தீயது எடுத்தும் சொல்லி
நல் மக்களாக உருவாக்கிட வேண்டும்
உம் மக்களை
சான்றோன் என கேட்ட தாய்
பெரிதும் உவகை கொள்வாள்
நல்லவன் என்று கேட்ட தாய்
அதனினும் மகிழ்வாள்
நீ உவகையும், பெரும் மகிழ்ச்சியும்
அடைய, அவரை முதலில்
நல்லவராக வளர்த்திடு தாயே
பின் அறிவுகள் தந்து, நல்ல
ஆசானிடம் சேர்த்து, அவன் தந்தையின்
உதவியும் சேர்ந்து சான்றோன்
ஆக மாற்றிடு
உன்னுடன் சேர்ந்து, உலகமும்
பெருமை கொள்ளும், உந்தன்
அருமையான மக்களை நினைத்து