கா, கா, கா, கா

ஒற்றுமைக்கு வழி காட்டி
உணவுதனை தன் இனத்துடன்
கூட்டி, கூட்டி பங்கிட்டு
ஒன்றின் மரணத்தில்
அனைத்தும் கூடி அழுது,
ஏங்கி தவித்து
ஒரு மரத்தினில் கூடு கட்டி
அதனில் சில முட்டைகள் இட்டு
குஞ்சுகள் பொறித்து, அதனை
பொன் குஞ்சுகளாக வளர்த்து
உறவினர் வருகையை அவர்
வீட்டு வாசலில் அமர்ந்து கரைந்து
மனிதர்க்கு தெரிவித்து
கருப்பினிலும் சிறந்து மிளிரும்
காக்கையே
ஒன்னா இருக்க கத்துக்கணும்,
உன் செயல பார்த்து
மனித இனம் ஒற்றுமையா
இருந்துக்கனும்