அந்த ஒரு நாளில்

இந்த நொடியின்
நிஜங்களோடு
என் கனவுதேசத்தை
கண்டுகொண்டிருக்கிறேன்.

என்றோ எவரோ
எழுதிவைத்த
ஒரு சரித்திரநாவலை
வாசித்து முடித்த
திருப்தியில்,-அவன்
கண்கள் பிரகாசிக்க
மூடி வைக்கிறான்
அதை மேசையில்........

விடியலோடு தொடங்கிய
வேலைப்பளுவுடன்
குடும்ப சுமைகளை
முதுகில் சுமந்தபடி
ஒருவன்,
மூட்டைகளை
தூக்கித்தூக்கியே
களைத்துப்போகிறான்!

ஆங்கோர் குடிலில்
பிள்ளையின் அழுகுரல்.....
தேற்ற வழிதேடும்
தாய்.....
பாலூட்டிப்பார்க்கிறாள்,
குடித்துவிட்டு
குழந்தை மீண்டும்
அழுகிறது!
வயிற்றுவலியோ என
ஓமத்திராவகம் கொடுத்து
தாலாட்டுகிறாள்.
அழுகையை நிறுத்தாத
குழந்தையின்
மனதைப்படிக்கமுடியாமல்
மனம் நொந்து
போகிறாள்!
இந்த நாடகத்தை
காணப் பொறுக்காத
அந்த நாய் கூட
அமைதியற்று
அலைந்தது அங்குமிங்குமாய்.....

ஊரேல்லாம் சுற்றிய
ஒரு காகம்
அந்த மதில்மேல்
அமர்ந்த படி
சேதி சொல்லிக்கொண்டிருந்தது!
அந்த எரிச்சல்
தாளாமல் விரட்டிவிட்டும்
சிலநொடியில்
மீண்டும் வந்தமர்ந்து
கரையத்தொடங்கியது!

ஒரு பிச்சைக்காரி
கைக்குழந்தையுடன்
வீடுவீடாய்
கையேந்திக்கொண்டிருந்தாள்!
கருணையுள்ளங்கொண்டவர்கள்
ஓரிரு சில்லரையைக்கொடுத்து
புண்ணிய புத்தகத்தை
நிரப்பிக்ெகாண்டிருந்தார்கள்!

இப்படியாக........

இன்றைய பொழுதும்
எத்தனையோ நாடகங்களை
மேடையேற்றிய
களைப்பில்
சற்று ஓய்வெடுத்துக்கொள்ள
சிந்திக்கலாயிற்று!

இவற்றையெல்லாம்
கண்டு கண்டு
அழுத்துப்போன
சூரியன்,
மேற்கு வானில்
ஔிந்துகொள்ள
இடம்தேடிக்கொண்டிருக்க....

அந்த நிலவிவின் பயணம்
ஆரம்பமாயிற்று......

அது......
இருட்டில் நடக்கப்போகும்
ஆயிரமாயிரம்
காவியங்களுக்குத்
தலைப்பிடத்தொடங்கியது!

இதோ.... இதோ....
இனி நிலவின் பயணம்.......!!!

எழுதியவர் : கலாசகி ரூபி (21-Jun-14, 12:39 pm)
Tanglish : antha oru nalil
பார்வை : 54

மேலே