கனிவோடு சொல்லிடு , பணிவோடு சொல்லிடு
கனிவோடு சொல்லிடு
பணிவோடு சொல்லிடு
கருத்து வேறுப்பாட்டுக்களை
அடுத்தவர்க்கு, சொல்ல வேண்டிய
சூழ்நிலை வரும்போதிலே
எத்தனையோ நேரம் வேறுபாடுகள்
வேதனையில் முடிவது,
சொல்லும் துவனியின் கடுமையினாலே
எத்தனையோ விரோதங்கள் வளர்வது,
சொல்லும் விதத்தாலே
சொல்லிடு சொல்ல வேண்டியதை
சொல்லிடு அதை தகுந்த முறையில்
சொற்கள் கடுமையானால், ஆபத்தில்
முடிந்திட கூடும் சில நேரம்
எளிதில் தீர்வு காணகூடிய விஷயங்களை
வலிதில் கொண்டு போய் முடிக்காதீர்கள்
திறம்பட சொல்லுங்கள், அறிவில் உரைக்கும்
படி சொல்லுங்கள்
கோபத்தை கிளறி,அனாவசிய
பிரச்சினைகளை உருவாக்காதீர்கள்
சொல்வதை கனிவோடு சொல்லுங்கள்
கொஞ்சம் பணிவோடு சொல்லுங்கள்