ஒரு எழுத்து, ஒரு சொல், ஒரு வரி

ஒரு எழுத்து

ஒரு சொல்

ஒரு வரி

சிறப்பது அது எதனாலே?

'அ' என்ற எழுத்து அன்னையை குறிப்பதினாலே

'அப்பா' என்ற சொல் தந்தையை குறிப்பதினாலே

'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்'
என்ற வரி தாய், தந்தையை தெய்வம் என்று
சொல்லுவதினாலே

அ என்ற எழுத்தும், அப்பா என்ற சொல்லும்
அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்ற
வரியும் தமிழ் வரிகள் என்பதினாலே மேலும்
சிறந்தது, சொல்லவும் இனித்தது

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (21-Jun-14, 12:55 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 143

மேலே