தமிழினை தாய் மொழியாக கொண்டேன்

தமிழினை தாய் மொழியாக
கொண்டேன்

தமிழினை தாலாட்டாக
கேட்டேன்

தமிழினை எனதன்னை
பாலோடு சேர்ந்தூட்ட
பருகினேன்

தமிழினை விளையாட்டில்
பகிர்ந்தேன்

தமிழினை முதல் பாடமாக
கொண்டேன்

தமிழினை முறையாக
கற்றேன்

தமிழினை நான் வாசிக்க

தமிழினை நான் சுவாசிக்க

தமிழினை நான் நேசிக்க

தமிழ் என்னை தன் புதல்வியாக
தத்தெடுத்ததோ?

நான் தமிழினை என் மொழியாக
தத்தெடுத்தேனோ?

மொத்தத்தில், என் தாய் மொழியாம்
தமிழ் எனக்கு தந்தது பல சிறப்புகள்

அதில் எல்லாம் தலையாயது
நான் எழுதும் இந்த பக்கங்கள்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (21-Jun-14, 1:01 pm)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 159

மேலே