கலாசகி ரூபி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கலாசகி ரூபி |
இடம் | : நீர்கொழும்பு |
பிறந்த தேதி | : 20-Jul-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-May-2014 |
பார்த்தவர்கள் | : 253 |
புள்ளி | : 74 |
கவிதை என் தோழி...
பாடல் என் சுவாசம்....
பாட்டி!
கிராமத்து வாசனையோடு
பள்ளி விடுமுறைக்காய்
காத்திருப்பாய்,
பேரன் பேத்திகளின்
வருகைக்காய்........
வெற்றிலையால் சிவந்த
வாயுடன்
நீ தந்த முத்தங்கள்
இன்றும் பசுமையாய்
இனிக்கிறதே
எங்கள் நினைவுகளில்,
என்றும் மங்கமல்
உந்தன் அன்பு.
வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!
அடியே உன்ன என்ன
கேட்டன் கண்ணீரா
கேட்டு தான காதலிச்சன்
என் காதல் கண்ணே வா
என் முன்னே வா
என் முன்னேஏஏஏஏஏ வா....
குத்தாம உருவர காதல் இதயத்த
சொல்லமா நிருத்தர நம்ப பயணத்த
என் காதல் கண்ணேஏஏஏஏ வா
முன்னே வா.......
பகலிலே மறுக்கிறாய் கனவிலே நடிக்கிறாய்
பெண்ணே வா....
முன்னே சுடுகிறாய்
பின்னே அணைக்கிறாய்
என் முன்னே வா.....
புதுசாய் மறுக்கிறாய்
அன்பே ஏனோ நம் காதலை முடிக்கிறாய்
வேணா அன்பே வா
என் கண்ணேஏஏஏ வா....
கை பிரியாமல் வாழ்ந்தோம் இங்கு
சந்தோச வரம் தந்தாய் அன்று
சாக வரம் கேட்கிறேன்
நீ இல்லாமல் இன்று
பார்த்தே கொள்கிறாய்
பாவமாய் நிற்கிறாய்
கோபமாய் கேட்கி
என் மரணத்தின் பின்
நீ வைக்கும்
மலர்வளையங்களும்,
உன் மௌனாஞ்சலிகளும்
என் பிணத்திற்கு
அநாவசியமானவை!!!
நீ நான் நான் நீ
யார் நானோ
நீயாக யாரோ
வேறோ வேரோ
தூரோ பாரோ
பிணம் தின்ன
இரவில்
ருசித்தது
நாவின் சிந்தனை
பிணமான ருசியில்
ரசித்தது
நானும் நீயும்
அற்ற பாரின் யாரோ.
என் மரணத்தின் பின்
நீ வைக்கும்
மலர்வளையங்களும்,
உன் மௌனாஞ்சலிகளும்
என் பிணத்திற்கு
அநாவசியமானவை!!!
அந்த வான் வௌியில்
அழகே வடிவெடுத்து
சஞ்சித்திருந்த
அச்சிறு பட்டத்தை
பிடித்திருந்த கைகள்
திடீரென கைவிட்டுச்சென்றன...
காற்று அதை
கவலையே இன்றி
விரட்டிச்சென்றது,
அநாயாசமான
அதன் விளையாடுக்களில்
பட்டம்,
போகும் பாதை புரியாத
நிலைதான்.
அந்த சிந்தனைகள்
ஏதுமற்றதாய்
அது ஜடமென
பிறந்த ஆறுதல்
ஒன்றே
போதுமானதாய்....
அது எங்கோ
இழுத்துச்செல்லப்பட்டகிறது.
நாளை அது
பிய்ந்த தேகத்துடன்
நிசப்தங்கள் நிரம்பிய
புல்வௌியிலோ,
ஒங்கி உயர்ந்த
மரக்கிளையிலோ
நதியிலோ கடலிலோ,
எங்கேனுமோர்
மணற்பரப்பிலோ
அநாதரவாய்
வந்துவிழக்கூடும்.
எத்தனையோ
கால்கள்
அதை எத்திச்செல்வும்
கூடும்.
வனைந்தவனை
இன்று நான்
அமர்ந்திருக்கும்
இக்கல்லின் மீது
நாளை யாரோ
வந்தமர்ந்து எதையோ
சிந்தித்திருக்கூடும்!
இன்று என் சிந்தனைகளோடு
நான் எனை சிறைப்படுத்திய
இந்த நொடிகளைப்பற்றி
அவர் அறிந்திருக்க
ஞாயமில்லை!
இந்த மேதினில்
தடம்பதித்திட
போராடும் வாழ்வின் பாதையில்
தடயங்களே இன்றி
மாண்டுபோன
ஜீவன்கள் எத்தனையோ!
இறப்பின் மடியில்
அடைக்கலம்
கிடைக்கும் நாள்வரை
ஏதோ எப்படியோ
வாழ்துவிட்டு
போகின்றன
ஜீவராசிகள்!
ஏதோ காரணத்தினால்
இறந்துபோன
தன் குட்டியை
தன்னோடு அணைத்தபடி
தாய் பாசத்தில் குலைந்த
ஒருகுரங்கு,
கிளை தாவிபறித்திட்ட
பழத்தைஊட்டிவிடத்
துடிக்கிறது....
குட்டியோ
அன்பினில் நிறைந்த
அ
ஒரு வித்து
முளைத்துக்கொண்டது!
நெடுங்கால வளர்ப்பில்
பற்பல பருவகாலங்களை
கடந்து,
பன்கிளை பரப்பி
கம்பீரம் கொண்டது.
நிமிர்ந்து நின்றது!
அன்று...
சில மனித இயந்திரங்கள்
நிஜ இயந்திரங்களுடன்
அதை சூழ்ந்து கொண்டன!
மரம் சிரித்துக்கொண்டது
இறுதியாய்....!
அதன் முருவல்
அங்கே எடுபடவில்லை!
அடுத்தகணம்
பூமியிலிருந்து
ஓரடி உயரத்தில்
ஒரு கொலை நிகழ்ந்தது!
மரம் இப்போது
கதறி அழுதது!
அதற்கு வலி
தாளவில்லை!
பூமியை ஊடறுத்த
தன் பன்கால்களை
இறுக்கிக்கொண்டது!
தன் உடலும் கழுத்தும்
கைகளும் விரல்களும்
சிதறி விழுந்தன
தரையில்...!
அங்கு பலர்
சிரித்துக்கொண்டனர்.....
அடுபெரிக்க விறகு