அநாதை பட்டம்

அந்த வான் வௌியில்
அழகே வடிவெடுத்து
சஞ்சித்திருந்த
அச்சிறு பட்டத்தை
பிடித்திருந்த கைகள்
திடீரென கைவிட்டுச்சென்றன...

காற்று அதை
கவலையே இன்றி
விரட்டிச்சென்றது,

அநாயாசமான
அதன் விளையாடுக்களில்
பட்டம்,
போகும் பாதை புரியாத
நிலைதான்.
அந்த சிந்தனைகள்
ஏதுமற்றதாய்
அது ஜடமென
பிறந்த ஆறுதல்
ஒன்றே
போதுமானதாய்....
அது எங்கோ
இழுத்துச்செல்லப்பட்டகிறது.

நாளை அது
பிய்ந்த தேகத்துடன்
நிசப்தங்கள் நிரம்பிய
புல்வௌியிலோ,
ஒங்கி உயர்ந்த
மரக்கிளையிலோ
நதியிலோ கடலிலோ,
எங்கேனுமோர்
மணற்பரப்பிலோ
அநாதரவாய்
வந்துவிழக்கூடும்.

எத்தனையோ
கால்கள்
அதை எத்திச்செல்வும்
கூடும்.

வனைந்தவனை நோவதா?
வாழ்க்கையை நோவதா?
பிடித்தவன் கைகளில்
பிழையென சொல்வா?
எவர்,
எதை சொல்லி
என்ன பயன்.
பரிதாபம் இங்கே
பட்டத்திற்கன்றோ???

எழுதியவர் : கலாசகி ரூபி (23-Jul-14, 11:15 am)
Tanglish : anaathai pattam
பார்வை : 120

மேலே