அது அழுதுகொண்டிருந்தது

ஒரு வித்து
முளைத்துக்கொண்டது!
நெடுங்கால வளர்ப்பில்
பற்பல பருவகாலங்களை
கடந்து,
பன்கிளை பரப்பி
கம்பீரம் கொண்டது.
நிமிர்ந்து நின்றது!

அன்று...

சில மனித இயந்திரங்கள்
நிஜ இயந்திரங்களுடன்
அதை சூழ்ந்து கொண்டன!

மரம் சிரித்துக்கொண்டது
இறுதியாய்....!
அதன் முருவல்
அங்கே எடுபடவில்லை!

அடுத்தகணம்
பூமியிலிருந்து
ஓரடி உயரத்தில்
ஒரு கொலை நிகழ்ந்தது!

மரம் இப்போது
கதறி அழுதது!
அதற்கு வலி
தாளவில்லை!

பூமியை ஊடறுத்த
தன் பன்கால்களை
இறுக்கிக்கொண்டது!

தன் உடலும் கழுத்தும்
கைகளும் விரல்களும்
சிதறி விழுந்தன
தரையில்...!

அங்கு பலர்
சிரித்துக்கொண்டனர்.....
அடுபெரிக்க விறகும்
தன் தொழிலுக்கான
மூலப்பொருளும்
கிடைத்ததாம்....!

கிளைக்கைகள்
வெட்டப்பட்டன...
நடு உடலம்
நடு வயிற்றோடு
பிளக்கப்பட்டது....
இன்னும் இன்னுமாய்...
சீவப்பட்டு
மரம் பலகையானது!

பூமியுடன் குற்றியாய்
மரம்
அழுதுகொண்டிருந்தது......

தொடரும்….

எழுதியவர் : கலாசகி ரூபி (13-Jun-14, 2:04 pm)
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே