நலமோடு வாழ்க

எனக்கு தெரியும்...
நல்ல குடும்பத்தை,
உண்மையான காதலை,
மேன்மையான நட்பை,
சாவு வரம் தந்து
பிரித்த கடவுள்
சொர்க்கத்தில்
என்னிடம்
மன்னிப்பு கேட்பார்
உன் தலைஎழுத்தை
மட்டும் தவறாக
எழுதிவிட்டேனே என்று..!

கண்ணீரோடு நான்
சொல்வேன்
பாவத்திற்கு தண்டனை
மரணம் என்றால்
நான் என்ன பிறக்கும் போதே
பாவம் செய்தா வந்தேன்
அப்போது நீர்
தந்த வரம்
இப்போதல்லவா
வலிக்கின்றது...!

என் இல்லக் கோவிலை,
நட்பு சுவரை,
காதல் தெய்வத்தை,
கனவு கோட்டையை
நீர் இறைவன் என்ற
தைரியத்தில் தானே
உடைத்து
சின்னா பின்னமாக்கினீர்..!
இதையே
இன்னொரு மனிதன்
செய்திருந்தால்
அவன் உயிரை அல்லவா
குடித்திருப்பேன்..!

நீர் மன்னிப்பு
கேட்பதற்கு பதில்
என் தலைஎழுத்தை திருத்தி
எழுதிருக்கலாமே..!

பரவாயில்லை
நான் உடல் நலமில்லாமல்
இறந்தாலும்
நீர் நலமோடு வாழ்க..!

எழுதியவர் : (13-Jun-14, 1:54 pm)
பார்வை : 90

மேலே