போலி

ஒரு நாள் இரவு நேரம் அந்த மருத்துவமனையில் இருந்து ஒருவன் வேகமாக ஓடி வந்தான்.
அவன் வாசலை அடையும் முன் மற்றொருவன் உள்ளே நுழைந்தான்.
"என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி ஓடி வருகிறாய்?"
அதற்கு ஓடி வந்தவன் "இதுவரைக்கும் ஒன்னும் ஆகல, இனிமே தான் எதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு ".
"என்ன சொல்ற? "
"நாளைக்கு காலையில எனக்கு ஆபரேஷன், அதன் பயந்து ஓடுறேன்."
"அடப்பாவி இதுக்கா பயந்து ஓடுற?
எனக்கும் தான் நாளைக்கு ஆபரேஷன். இந்த காலத்துல ஆபரேஷன் சகஜமப்பா"
"நானும் துணிச்சலாதான் இருந்தேன். ஆனால் நர்ஸ் சொன்னத கேட்டு பயந்துட்டேன் "
"என்ன சொன்னாங்க"
"இது ஒரு சின்ன ஆபரேஷன் தான் இதுக்கெல்லாம் பயப்படாதிங்க"
"சரியாதானே சொல்லியிருகாங்க"
"ஐயோ நர்ஸ் என்கிட்டே சொல்லல. ஆபரேஷன் செய்யபோற டாக்டர்கிட்ட சொன்னங்க".

எழுதியவர் : ரூபெல்லா (23-Jun-14, 11:52 am)
Tanglish : poli
பார்வை : 131

மேலே