தப்புத் தாளங்கள்
ஆயாசத்தைத் தரலாம்...
சிதறு தேங்காயாய் மனதை உடைக்கும்
அர்த்தமுள்ள சப்தங்கள் சில நேரங்களில்....
ஆகாசம் தொடத் தள்ளிவிடும்...
சிதறும் வைரத்தையும் தூசியாய் தூக்கிப் போடும்
அர்த்தமில்லாத தாளங்கள் ஒவ்வொரு தெரிப்பிலும்...
அனர்த்தங்களின் அர்த்தங்கள் புரியும் போது
அர்த்தங்களும் அனர்த்தங்களாய்த் தோன்றுகின்றன...
அர்த்தமில்லாத வாழ்க்கையின் அனர்த்தங்களில்
அர்த்தங்களைத் தேடித் தேடி நாம்....

