என் நகரமே உனக்காக

என் நகரம்
சாலை நடுவிலே
ஈச்சை மரம் நட்டு
அழகு பார்க்கும்
ஒரு புதுமை
படைக்கும் நகரம்

தெருவோரம்
பல மின் கம்பம் நட்டு
அதன் மின் கட்டணம் கணக்கை பார்த்து
அடிக்கடி கூச்சல் போடும்
நகர சபை

ஒரு எல்லை ஆறு கீற
மறு எல்லை கடல் கீற
இரண்டையும் தொட்டுக்கொண்டே
நடுவில் ஓடும் நகரம் அது

ஈரெண்டு கிலோ மீட்டர் பரப்பிலே
நாற்பதாயிரம் ஓட்டுகள் கிடப்பிலே
ஊருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என
உவகை பாடும் நகரம் அது

நாற்பதிற்கு மேல் இறையில்லம்
முப்பதிற்கு மேல் கல்விசாலை
ஆண் வேறு பெண் வேறு என்று
ஒழுக்கம் பேணும்
நகரம் இது

சொர்க்கமும் மறு உலகிலே
நம்மிய மக்கள் நாங்களே
இருக்கும் நாட்களிலே
நாங்கள் வாழும் சொர்க்கம்
எங்கள் நகரமே

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (23-Jun-14, 5:56 pm)
பார்வை : 151

மேலே