என்ன வாழ்க்கைடா இது

அதே ஓட்டம்
அதே பேருந்து
அதே வாழ்க்கை

தாலி கட்டாத
மனைவியாய் கம்ப்யூட்டர்
காலை முதல் மாலை
வரை கையோடு
எலி(மவுஸ்) தொல்லை
பாவம்
அடிபட்டு சாகும் கீபோர்டு

எட்டி உதைக்கும் கோபம்
இருந்தாலும்
எட்டி பார்க்கையில் எல்லாம்
சிரித்தபடி ஒரு எஸ் சார்
மேலதிகாரிக்கு..........

உணவுவேளை வந்தாலும்
உணர்வு சொல்வது பசியில்லை
அப்படியே சாப்பிட்டாலும்
எதிலுமே ருசி இல்லை

எங்கேயோ இருக்கிறாள் மனைவி
என்ற தைரியத்தில்
சீ சாப்பாடா இது என
ஆதங்கம் தீர திட்டிவிட்டு
சரியாக கழுவி கவுத்து வைத்த டிபன்பாக்ஸ். ..........

போதுமடா சாமி என
பொலம்பியபடி இருந்துவிட்டு
ஓடாத நேரத்தை ஒவ்வொரு நொடியும் பார்த்துவிட்டு
ஒருவாறு மணி ஆனதும்

அடித்து பிடித்து
பஸ் ஏறி
அவன் இடிக்க
இவன் இடிக்க
வியர்வை நாற்றம்
பஸ்ஸே மணக்க
சில்லரைக்கு பதில்
நூறு ரூபாய் எட்டி பார்க்க
சாவுகிராக்கி வந்துடான்
என கண்டக்டர் கேட்க

கண்டக்டர் கொடுத்த
அன்பு வாய் மாலையை பெருமையாக
சூடி கொண்டு

கீழே விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டவில்லை
என்பதுபோல் பிறரை பார்த்து
சிரித்து விட்டு

வீடு வந்து மூட்டைகளை
எங்கெங்கோ
விசிறிவிட்டு
சோபாவில் சாய்ந்து தெம்பாக ஒரு சோம்பலை முறித்து
பட்டக் பட்டக் என
பிடிப்புகள் உடைகையில்
கிடைக்குமே ஒரு நிம்மதி

அப்பப்பா............
கட்டிய புதிதில்
பெற்ற முதல்
முத்தம் போல ........!

எழுதியவர் : கவியரசன் (23-Jun-14, 6:55 pm)
Tanglish : thinam thinam
பார்வை : 396

மேலே