என்னை மன்னித்து விடு

கணவன் ;
உன் முகத்தை பார்த்து
எத்தனை வருடங்கள்
ஆகிவிட்டது...
உணவில் உப்பு காரம்
குறைந்தாலும்
உன் கையால் சமைத்து
நீ ஊட்டி விடும் போது
எந்த குறையும்
தெரியாமல்
போகுமே??

கட்டில் இன்பம்
நீ தரவில்லை
என்று நம்
உறவையே
அறுத்தேறிந்தேன்...
அதன் பின்
அனாதையாய்
நான் வாழ்ந்த போது
உன் அன்புக்கு
நான் ஏங்கிய ஏக்கம்
எனக்குமட்டுமே
தெரியும்

உயிரே..
மயிர் நரைத்தாலும்
என் உயிர் உன்னையே
நினைத்து வாழுது...
ஆண் கர்வம் பார்த்து
வாழ்க்கையை தொலைத்த
ஏமாளியாக நிற்கிறேன்
உன் முன்....

உன்னை கண்டவுடன்
ஓடி வந்து கட்டி
அணைக்க எனக்கும்
ஆசைதான்
ஆனால் நீ அணிந்திருக்கும்
காவி உடை
என்னை தடுத்து விட்டது...
மன்னித்து விடு அன்பே ....

மனைவி;
நலமாக இருக்கின்றீர்களா
என்பதைக் கூடக் கேட்க
உரிமை இல்லை...
உங்கள் அன்பு கரம்
பிடித்து நாம் நடந்து
சென்ற பாதையெங்கும்
பாலைவனமாக மாறியது
உங்களுக்கு தெரியுமா ???

நம் உள்ளங்களும் உணர்வுகளும் இடமாறியதால்
நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட
வரம் நம் மூன்று குழந்தைகள்...

வாரிசுகள் வந்தவுடன்
வரம் கொடுத்த பெரிய குழந்தையை
கவனிக்க மறந்துவிட்டேன்...
அதற்கு அக்குழந்தை கொடுத்த
தண்டனை விவாகரத்து...

உன் விருப்பத்தை
ஏற்று நீ கேட்டதை வழங்கினேன் விருப்பமில்லாமல்...
தனிமையில் நான்
இருப்பதை அறிந்து
பலமுறை கதவுகள்
தட்டப்பட்ட போது
நான் பட்ட வேதனையை
என்னவென்று
சொல்வேன்...

மாதம் மாதம்
நீ அனுப்பும்
பணம் வரும்...
என் உயிரே நீ
ஒரு முறைக்கூட
வரவில்லையே...

வரமாட்டாய் என்பது அறிந்தும்
பிள்ளைகளிடம் நீ
வருவாய் என எத்தனை
முறை பொய்கள் சொன்னேன்...

உணரும் வயது வந்தவுடன் என்னிடம்
கேள்விக் கேட்கவில்லை
பிள்ளைகள்...
ஆனால் உன் அன்புக்கு
அவர்கள் ஏங்கியதைக்
கண்டப் போது...
உன் உணர்ச்சிக்கு
இணங்கியிருந்தால்
நம் பிள்ளைகள் தந்தை
இருந்தும் இல்லா பிள்ளைகளாக
வளர்ந்து இருக்க
மாட்டார்களே..

என் தவற்றை நான்
உணர்ந்த போது
காலன் கரைப்புரண்டு
ஒடிவிட்டான்...
கணவனில்லா
பெண்களுக்கு துணை
அந்த இறைவனே...

பல காம நாய்களிடமிருந்து
என்னை காப்பாற்றிக்
கொள்ள காவி வேடம்
மனதார ஏற்றுக் கொண்டேன்...

என்னை மன்னித்து விடு...

..............................................................
"குறிப்பு"

விவாகரத்தாகி இருபது ஆண்டுகள் கழித்து ஒரு நிகழ்வில் கணவனும் மனைவியும் சந்திக்கின்றனர்....
வார்த்தைகள் பேசவில்லை ஆனால் இருவரின் கண்கள் பேசின...
..............................................................

எழுதியவர் : தமிழின் மகள் ஹேமலதா (23-Jun-14, 8:08 pm)
Tanglish : ennai mannithu vidu
பார்வை : 954

மேலே