அமைதி கொள் மனமே
அமைதி கொள் மனமே அமைதி கொள்...
ஆத்திரம் உன்னை சூழ்ந்து விட்டாலும்
அநியாயம் மொத்தமும் தாக்கினாலும்
அதர்மம் உன்மேல் அனுகிரகம் கொண்டாலும்
சினம் காட்டாமல் அமைதி கொள்...
தோல்வி உன்னை துரத்தி அடித்தாலும்
கஷ்டம் நெஞ்சை காயப்படுத்தினாலும்
துன்பம் தலை மேல் ஏறி அமர்ந்தாலும்
விரக்தி அடையாமல் அமைதி கொள்...
ஊர்மக்கள் உன்னை தாழ்த்தினாலும்
உலகே சேர்ந்து இகழ்தினாலும்
கோபம் உனக்குள் அளவு கடந்தாலும்
பொறுமை இழக்காமல் அமைதி கொள்...
தேய்ந்து வளரும் நிலவைப்போல
பூத்து உதிரும் மலரைப்போல
என்றும் எதிலும் அமைதி கொள்...
சிரித்தே கொஞ்சம் அமைதி கொள்...
நிலவாய் மலராய் பிறக்கவில்லை
இந்த அமைதியை எளிதாய் பெற்றிருக்க
நாம் மானிட ஜாதியில் பிறந்து விட்டோம்
மன அமைதியை மனதுக்குள் புதைத்து விட்டோம்
இது இயற்கையின் சதியா தெரியவில்லை
ஆண்டவன் விதியா புரியவில்லை
அட இப்படியே நாம் பழகி விட்டோம்
இதை உணராமல் மெல்ல வளர்ந்து விட்டோம்
கண்டும் காணாமல் விட்டு விட
ஒரு பகுத்தறிவு இங்கு தேவையில்லை
இதை ஓரிரு நாட்களில் கொண்டு வர
இங்கு மாத்திரை மருந்தென்று ஏதும் இல்லை
ஒரு மாற்றம் கண்டிட உழைத்திடுவோம்
நம் பழக்கத்தில் அமைதியை புகுத்திடுவோம்
மன அமைதியில் உலகை வென்றிடுவோம்...
எங்கும் எதிலும் உன் உழைப்பால் மன அமைதியால் வெற்றி கொள்
வெற்றி பெற்ற பின்னரும் அமைதி கொள் மனமே...
[உங்கள் கருத்துக்களை பகிர்ந்து என் பிழைகளைக் குறைக்க உதவுங்கள்]