தனிமையில் வாடும் ஒரு தந்தையின் ஏக்கம்
நீ தளிர் நடை போட்டபோது என் கரங்களை பற்றிக்கொண்டாய்.
நான் நெகிழ்ந்தேன், நான் தளர் நடை போடும் வயதில் என் கரங்களை பற்றுவாய்யென்று
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழி
எந்திரமயமான வாழ்க்கையில் தலைனண மந்திரமானது
எல்லோரும் எள்ளி நகையாடுவர்களே என்று எல்லா நகைகளையும்
அடகுவைத்து அனுப்பி வைத்தோம் அயல்நாட்டிற்கு
ஆனால் நீயோ டாலரை கொஞ்சிக்கொண்டு இந்த டாடிஐ கைவிட்டாய்
கல்லூரிவாசலில் காத்துக்கிடந்தேன் உன் கல்விக்கு இடம் கிடைக்குமா என்று
இன்றும் காத்துக்கிடக்கிறேன் உன் இதயத்தில் இடம் கிடைக்குமா என்று
யானை விளையாட்டுக்காக முதுகில் சுமந்தேன் உன்னை.
முதுகில் சுமந்த என்னை விளையாட்டாய் முதியோர் இல்லத்தில்
தள்ளி விட்டாய்.
ஒப்பந்தம் முடிந்து வேலையாக இங்கு வந்தால், ஒரு வேளை சோறு கிடைக்கும் என்று விசாலமான கண்களுடன் காத்திருந்தேன்.
ஆனால் நீயோ விசாவிற்காக காத்திருக்கிறேன் வேருஒருநாட்டிற்கு, என்கிறாய்.
கூடி வாழ்ந்தால் கோடி நண்மை எனக்கூறிய என் உதடுகள், சுருங்கி, கண்கள் வாடி, மரணப்படுக்கையில், வாழ்க்கையின் கடைக்கோடியில் காத்திருக்கிறேன்.
நீயோ ஈட்டியதொகை லட்சம், கோடியாக வேண்டும் என்கிற இலட்சியத்திற்காக காத்திருக்கிறேன் என்கிறாய்
மூச்சுநின்று மூங்கிலில் உடல் கிடக்க கொள்ளி வைக்க வருவாய்
என என் உடல் காத்துகிடக்க, நீயோ கில்லியாய் பறந்துக்கொண்டிருக்கிறேன் என்று அலைபேசியில் சொல்வாய் நாசுக்காக.
கற்றடைத்த பை காற்றிழந்து கிடக்க, ஈமச்சடங்கு செய்ய வருமாறு உறவினர்கள் அழைக்க, நீயோ ஈமெயிலில் பதிலளிப்பாய் இதற்கு ஈபேவில் வழி உண்டா என்று
நான் கண்மூடி கபாலம் மூடும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீயும் ஒரு தந்தைதான், உனக்கும் முதுமை வெகுதொலைவில் இல்லை
தள்ளாடும் வயதில் தந்தையரை தவிக்கவிட்டு தன்னலமாய் வாழும் மகன்களே, மகான்கள் ஆகுங்கள் தந்தையருடன் வாழ்ந்து
இக்கவிதை தனிமையில் முதியோர் இல்லங்களில் வாழும் தந்தையர்களுக்கு சமர்பிக்கிறேன்
ஜூன் 15 தந்தையர் நாளை தந்தையருடன் கொண்டாடுவோம்