மாங்கனியின் தேடல் - முழு கதை தொகுப்பு

மாங்கனியின் தேடல்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

”மாங்குடி ஊராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற பெயர் பலகையை பார்த்து கொண்டிருந்த கனி……ஃபாதர் ஊரு வந்துடுச்சு என்னோட லட்சியத்தை நோக்கி அடிவைக்க போகிறேன்..என்னை ஆசிர்வதியுங்கள்…..

மகளே !!! கடவுள் என்றும் உனக்கு துணையா இருப்பார்….GOD BLESS YOU MY CHILD …..

(மாங்கனி மிகவும் சுட்டிப்பெண்…கனி என்று அவளை எல்லோரும் செல்லமாக அழைப்பார்கள்….கனியோட துடுக்குத்தனமும் , சேட்டையும் தேவாலயத்தில் உள்ள எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று….கனி-யோட சின்ன வயசுல இருந்தே தேவாலயம் தான் அவளோட வீடு….சந்தோஷம் எல்லாம்…..அங்க இருக்குற ஃபாதர் டேவட் தான் அவள சின்ன வயசுல இருந்து வளர்த்து படிக்க வைக்கின்றார்….மாங்குடி கிராமத்துல ஆவிகள் பத்தி ஆராய்ச்சி பண்ண தான் இப்ப ஃபாதர் டேவிட் கனி-ய அங்க கூட்டிட்டு போகிறார்…..கனிக்கு ஆவிகள் பற்றி ஆராய்வதில் ஆர்வம் அதிகம்…அதனால் அதைப்பற்றி ஆராய்ந்து அதை ஒரு புத்தகமாக வெளியிடப் போகிறாள்….அப்பொழுது தான் ஃபாதர் டேவிட் மாங்குடி கிராமத்தைப் பற்றி கனி-யிடம் கூற கனி-யும் தன் பயணத்தை மேற்க்கொள்கிறாள்)

(இருவரும் இரயிலை விட்டு இறங்கினர்….பெயருக்கு ஏற்றாற் போல் பசுமையான மாமரங்களுடன் அவ்வூர் இயற்கையுடன் உறவாடுகின்றன…….கனிக்கு அவ்வூரின் பசுமையான இடமும்.காற்றும் அவள் மனதைக் கொள்ளை அடித்தன……)

என்னதான் சிட்டி-ல வாழ்ந்தாலும் கிராம வாழ்க்கை ஒரு சுகம் தான்….அந்த சுகம் சிட்டி வாழ்க்கை-ல கிடைக்காதுல ஃபாதர்……..
ஆமா கனி சரியா சொன்ன……ஆனா இப்ப இருக்குற மக்களுக்கு எங்க புரியுது……

(இப்படி விவாதங்களுடன் பேசிக்கொண்டே இருவரும் தேவாலயம் நோக்கிச் சென்றனர்….அப்போது வழியில்)
……..

ஃபாதர் டேவிட் ஐயா எப்படி இருக்கீங்க …..எவ்வளோ நாள் ஆச்சு உங்கள பாத்து…..ஆமா யாரு இந்த பொண்ணு…புதுசா இருக்கு….

நான் நல்லா இருக்கேன் மருது…..இவுங்க பேரு கனி…நம்ம ஊருல அந்த பங்களா வீட்டுல ஆவிகள் பத்தி ஆராய்ச்சி பண்ண வந்து இருக்காங்க….கனி இவன் பேரு மருது….நான் இந்த ஊரு-ல ஃபாதர்-ஆ வேலை பார்க்கும் போது எனக்கு உதவியா இருப்பான் தேவாலயத்து-ல……

ஓஓஓஓ அப்படியா ஃபாதர்…வணக்கம் ஐயா….

(கனியை மேலும் கீழும் பார்த்தான் மருது)ஏம்மா உனக்கு இந்த வேண்டாத வேலை…உன்ன பாத்தா பெரிய இடத்து பொண்ணு மாதிரி இருக்கு….உனக்கு ஏன் இந்த வம்பு…அங்க இருக்குற ஆவிக பயங்கரமானதுக…..நிராசையில் செத்து போனவக….இது வரைக்கும் அங்க போனவங்க யாரும் உயிரோட போனது இல்ல தாயி….பேசாம ஊருக்கு கிளம்பு…அதான் உனக்கு நல்லது மா….

ஐயா நீங்க கவலைப்படாதீங்க…..பெண்கள் தனியா விண்வெளிப்போற இந்த காலத்துல இப்படி இருக்கீங்களே…..எல்லாம் நா பாத்துகுவேன்…கவல படாதீங்க….எதும் என்ன ஒன்னும் செய்ய முடியாது….

என்னமோ போ சொன்னா எங்க கேக்குறீங்க….எல்லாம் உன் தலைவிதி….

சரி நாங்க கிளம்புறோம் மருது…நம்ம ஜான் ஃபாதர்-அ பாத்து கனி-ய ஒப்படச்சுட்டு நான் ஊருக்கு கிளம்பனும்…சரிங்க ஃபாதர்…நானும் கிளம்புறேன்…

(கனியும்,ஃபாதர் டேவிட்-ம் தேவாலயத்திற்குள் சென்றனர்)

ஃபாதர் ஜான் அவர்களை…வாங்க ஃபாதர் டேவிட் ….எப்படி இருக்கீங்க???

நா நல்லா இருக்கேன் ஃபாதர் ஜான்..நீங்க எப்படி இருக்கீங்க….

இறைவன் அருளால நல்லா இருக்கேன் ஃபாதர்…….

இவுங்க தான் நா சொன்ன பொண்ணு மிஸ்.கனி ஆராய்சிக்காக வந்து இருக்குற பொண்ணு…

வெல்கம் மிஸ்.கனி…வணக்கம் ஃபாதர்…என்ன ஆசிர்வதிங்க…GO BLESS YOU MY CHILD…..

சரி ஃபாதர் ஜான் நா கிளம்புறேன்..கனி-ய பத்திரமா பாத்துக்கோங்க…நா உடனடியா கிளம்பனும்…அங்க நிறைய வேலை இருக்கு…

என்ன ஃபாதர் டேவிட் அதுக்குள்ளையுமா??சாப்பிட்டுதான் போகனும்….சரி விட மாட்டிஙகளே என்று புன்னைகைத்தார் …

(உணவு முடிந்த பின் ஃபாதர் டேவிட் விடைப்பெற்றுக் கொண்டார்..)

கனி உங்களுக்கு எப்படி ஆவிகள் பத்தி ஆராய்ச்சி பண்ண ஆர்வம் வந்துச்சு???

சின்ன வயசுல இருந்தே எனக்கு பேய் கதைகள் பேய்கள் பற்றி தகவல்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் அதிகம் ஃபாதர்…அதான் நானே நேரடியா பல இடங்களுக்கு சென்று என் அனுபவங்களை புத்தகமாக தொகுக்க போறேன்…..

ஒரு பொண்ணா நீ இவ்வளவு தைரியமா இந்த விஷயங்களில் ஆராய்ச்சிப் பண்றத பாத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு My child….சரி உனக்கு உதவிக்கு ஒரு பையனை அறிமுகபடுத்தி வைக்கிறேன்….இரு அவன கூப்பிடுறேன்…மாதவா…… இதோ வரேன் ஃபாதர்…….

(மாதவன் பார்க்க அழகாய் வீரனைப்போல் கம்பீரத்தோற்றத்துடன் இருந்தான்….மாதவனும் கனியைப் போன்று சிறு வயதில் இருந்து தேவாலயத்தில் வளர்ந்தவன்….)

வா மாதவா…இவுங்க மிஸ்.கனி…இங்க இருக்க பங்களா வீட்டுல ஆவிகள் பத்தி ஆராய்ச்சி பண்ண வந்து இருக்காங்க…..நீ அவுங்களுக்கு உதவியா இரு….சரி நா கொஞ்சம் வெளிய போனும்….நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க…..

ஹலோ !!! மிஸ்டர்.மாதவன்….ஹலோ மிஸ்.கனி ...........

மாதவன் என்ன அந்த பேய் பங்களாக்கு கூட்டிட்டு போக முடியுமா???

நிச்சயமா…..ஆனா ஒரு கண்டிசன்…நைட் டைம்-ல அங்க எப்பவும் போக கூடாது…பகல்-ல மட்டும் தான் போகனும்…..(கொல்லென்று சிரித்தாள் கனி)

அடடா….மாதவனுக்கு பேய்-னா அவ்வளவு பயமோ???? யாருக்கு பயம்……பயம்-லா என்ன பாத்து பயப்படும் என்று மழுப்பி பயத்தை மறைத்தான்….. சும்மா பொய் சொல்லாத மாதவா..உன்னோட முகமே உன்ன காட்டிக் கொடுக்குது என்று நக்கலாக சிரித்தாள் கனி…..

சரி விடுங்க ஒத்துக்குறேன்…அந்த பேய் பங்களா-ல தான் எங்க அப்பாவும்,அம்மாவும் இறந்து போனதா சொல்லுவாங்க….அதான் எங்க என்னோட உயிரும் போய்டுமோ-னு பயப்படுறேன்….

அப்படியா????????சாரி மாதவா…எப்படி இறந்து போனாங்க-னு கொஞ்சம் தெளிவா சொல்லேன்….

எனக்கு சரியா தெரியாது…நா அப்ப ரொம்ப சின்ன பையன்…இங்க இருந்த எல்லாரும் என்கிட்ட சொன்னத வச்சும் எனக்கு ஞாபகம் இருக்குறத மட்டும் சொல்லுறேன்…வாங்க அப்படியே பேசிட்டே நடந்துட்டே அந்த பங்களாக்கு போகலாம்……….சரி வா போகலாம்….

அந்த பங்களா-ல அழகான குருவிக்கூடு மாறி ஒரு குடும்பம் இருந்தாங்க……அந்த ஐயா பேரு மகேஷன்….அவர் தான் இந்த ஊரு-ல பெரிய பணக்காரர்….அவருக்கு அழகான ஒரு மனைவியும் ஒரு குட்டி பெண் குழந்தையும் இருந்தாங்களாம்…அவுங்க ரெண்டு பேரும் காதல் திருமணம்…அந்த ஐயாக்கு-னு சொந்தம் எதும் இல்ல…அந்த அம்மா வீட்டுல ஊரு பேரு தெரியாதவனுக்கு-லான் உன்ன கல்யாணம் பண்ணி வைக்கமுடியாது-னு சொல்லிட்டாங்களாம்…அதனால் அவுங்க ரெண்டு பேரும் ஒடி போய் கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம்…அந்த வீட்டு-ல தான் எங்க அப்பா வேலைப்பாத்தாரு…..மகேஷன் ஐயா-க்கு எங்க அப்பா ரொம்ப விஸ்வாசமா இருப்பாரு….எப்ப பாத்தாலும் எங்க அப்பா மகேஷன் ஐயா கூடவே இருப்பாரு….என்னையும் அவர் பொண்ணையும் ஒரே பள்ளிக்கூடத்துல சேர்த்து படிக்க வச்சாரு….எந்த முதலாளிக்கு இப்படி உயர்ந்த மனசு வரும் கனி,அந்த ஐயா ரொம்ப நல்லவரு…..நானும் அவர் பொண்ணும் நல்ல நெருங்கிய நண்பர்கள்….ஒன்னா தான் சாப்பிடுவோம் ஒன்னா தான் விளையாடுவோம்…அப்ப ஒரு நாள்…………………

நானும்,என் தோழியும் அவுங்க வீட்டு தோட்டத்துல எங்க நட்போட அடையாளமா ஒரு மாமரம் நட்டு வச்சுட்டு இருந்தோம் எங்க அப்பாவோட….அப்ப திடீர்னு ஒரு சத்தம் அவுங்க வீட்டுல இருந்து….நாங்க ஒடிப்போய் பாத்தா அங்க மகேஷன் ஐயாவும்,அவரோட மனைவியும் இரத்த வெள்ளத்துல இருந்தாங்க…..எப்படி இறந்தாங்க-னு ஒன்னும் புரியல…ஆனா அதுக்கு முன்னாடி அந்த ஐயாவும் அம்மாவும் அடிக்கடி சண்ட போட்டுகிட்டாங்க….என்ன சண்ட-னு எங்களுக்கு தெரியல….ஆனா அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு ஒத்துமையா இருப்பாங்க….யாரு கண்ணு பட்டுச்சோ….. ரெண்டு பேரும் சண்ட போட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் குத்திக்கிட்டு செத்துப் போயிட்டாங்க-னு கேஸ்-ஸ மூடிட்டாங்க அப்ப இருந்த போலீஸ்காரர்….அப்புறம் எங்க அப்பா தான் அந்த மகேஷன் ஐயாவோட பொண்ணையும் வளர்த்தார்….மகேஷன் ஐயா ஞாபகம் வரப்பலாம் எங்க அப்பா அந்த வீட்டுக்கு போய் வீட சுத்தம் பண்ணிட்டு வருவார்…அப்படி போகும் போது தான் ஒரு நாள் எங்க அப்பா அங்க மர்மமான முறையில் இறந்துகிடந்தார்…அத இங்க உள்ள எல்லாரும் அந்த ஐயா வோட ஆவி தான் எங்க அப்பாவ கொண்ணுட்டதா சொல்றாங்க…வாய் கூசாம அந்த வீட்டு அம்மாவையும் எங்க அப்பாவையும் தப்பா இணைத்து பேசுறாங்க….அவுங்க ரெண்டு பேருக்கும் தப்பா தொடர்பு இருந்த-த மகேஷன் ஐயா பாத்த-தால தான் அந்த அம்மாவையும் குத்தி அவர அவரே குத்திக்கிட்டு செத்துப் போய்ட்டதாகவும் ஆவியா வந்து எங்க அப்பாவையும் கொண்ணுட்டதா எல்லாரும் நம்புறாங்க….அப்பத இருந்து யாரும் அந்த பங்களா பக்கம் போறது இல்ல….போறவங்க உயிரோட திரும்பி வரதும் இல்ல…..ஆனா கனி அந்த அம்மா ரொம்ப நல்லவங்க…அந்த பத்தினி தெய்வத்த போய் தப்பா நினைக்குது இந்த ஊரு…அப்புறம் கொஞ்ச நாள்-ல நானும் என் தோழியும் பிரிஞ்சுட்டோம்…அவள வெளியூர்க்கு கூட்டிட்டு போய்ட்டாங்க அந்த மகேஷன் ஐயா-வோட நண்பர் ஒருத்தர்…..

(கனி-யோட மனம் வலியால் துடித்தது…..இருந்தும் அவள் அதை வெளியில் காடிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்தாள்)

அடக் கடவுளே!!!! இப்படியுமா பேசுவாங்க உண்மை எது பொய் எது-னு….சரி விடு நா அந்த உண்மைய கண்டுபிடிக்குறேன்…கவலைப்படாத….ஆனா நீ எனக்கு உதவி பண்ணணும்……..

நிச்சயமா கனி….பேசிட்டே வந்தது-ல வீடு வந்த-த கூட கவனிக்கப்பாரு….இது தான் அந்த வீடு……

(தன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்….கனிக்கு ஓவ்வொரு அறையாக சுற்றி காண்பித்தான்)

இது தாங்க மகேஷன் ஐயா வோட அறை…இது என் ஆளு அறை…

என்னது உன் ஆளா…என் சொல்ற…யாரு அது….சொல்லவே இல்ல…..

அதாங்க இப்ப சொன்னேன் –ல மகேஷன் ஐயா பொண்ணு…

ஆமா நீ தோழி-னு தான சொன்ன…..

ஆமாங்க…தோழியும் கூட….அதையும் தாண்டி எங்களுக்குள்ள ஒரு பாசம் அந்த வயசுல….என் முதலும் கடைசிக் காதலும் அதாங்க…..

ஹலோ ஹலோ…. என்ன பீலிங்ஸ்-லா ஓவரா போதே…..

ஆமாங்க….இன்னும் என்னால அவள மறக்க முடியல…நானும் எவ்வளவோ முயற்சசி பண்ணிட்டேன்…ஆனா அவள கண்டுபிடிக்க முடியல…..ஹம்ம்ம்ம்ம்………

பார்டா….மாதவனுக்குள்ள ஒரு காதல் காவியம்…ஆமா அந்த பொண்ணு உன்ன இன்னும் ஞாபகம் வச்சு இருப்பாளா????

தெரியல கனி….ஆனா அவ அப்ப ரொம்ப சின்ன பொண்ணு….என்ன விட 3 வயது சின்னவ…அப்ப அவளுக்கு என்ன தெரியும்….ஹம்ம்ம்ம்….என்னோட ஆளு இப்ப எங்க என்ன பண்ணிட்டு இருக்களோ…..

(கனி மெளனமாக அவனையே உற்று நோக்கினாள்)

சரி நா பேசுனா பேசிட்டே இருப்பேன்…நீங்க எதும் ஆராயல-யா????

இல்ல இப்ப இல்ல….இரவு தான் வரனும்…அப்பதான் உண்மையா பேய் இருக்கானு கண்டுபிடிக்க முடியும்….அதனால நைட் வருவோம்…

என்னது நைட்டா??????????நா வரல பா….

சரி நீ வராட்டிப் போ….நா நைட் இங்க வரதான் போறன்….

சரி வாங்க தோட்டத்த சுத்தி காமிக்குறேன்….இது தாங்க நானும் என் ஆளும் சேர்ந்து நட்டு வச்ச மரம்…..எங்க நட்பின் அடையாளம்…ஆனா இப்ப அவதான் என்கூட இல்ல என்று கண்கலங்கினான்….

சரி சரி அமைதி….உண்மையான அன்புக்கு என்றும் பிரிவு இல்ல….உன் ஆளு உனக்கு கண்டிப்பா கிடைப்பா…சரி வா போகலாம்….ரொம்ப நேரம் ஆகிடுச்சு….

(கனி தன்னுடைய அலைப்பேசியை ஃபாதர் டேவிட்க்கு தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருந்தாள்…அந்நேரம் மாதவன் உள்ளே வருகிறான்) தாங்க்யூ ஃபாதர்….இப்ப என்னோட ஒரு குழப்பம் தீர்ந்தது….நா அப்பறம் பேசுறேன் ஃபாதர்….என்று அலைப்பேசியை துண்டித்தாள்…..

என்ன குழப்பம் தீந்துச்சு கனி….

(ஒரு வித வெட்கத்துடன் மற்றும் பதத்தத்துடன் கனி) அது சீக்ரெட்….

என்ன சீக்ரெட் அது…சொல்லுங்க…

சீக்ரெட்-னா இரகசியம்….வெளிய சொல்லக்கூடாது என்று மாதவனை வம்பு செய்தாள்….

சொல்லாட்டி போங்க…..இப்ப அவசியமா அந்த பங்களாக்கு இப்ப போனுமா???நாளைக்கு காலை-ல போலாமே….

என்ன சொல்லுற நீ….உண்மையா அங்க பேய் இருக்கா இல்லையா-னு நைட் போய் பாத்தா தான் தெரியும்… அதனால இப்ப தான் போகனும் … நீ வந்தா வா….வராட்டி போ….இதே உன்னோட ஆளு கூப்பிட்டா போயிருப்ப…

(கனி சொன்ன அந்த வார்த்தை மாதவனுக்கு சுருக்கென்றது)

சரிங்க நானும் வரேன்….என் ஆளு இப்ப இருந்தாக்கூட உங்கள தனியா போகவிட்டதுக்கு திட்டி இருப்பா….

(கனி சிறு புன்னகையுடன்) சரி வா போகலாம்….

(இருவரும் பேய் பங்களாவிற்குள் சென்றனர்.....அப்பொழுது கனி மாதவனிடம்......)

இந்தா இத சாப்பிடு மாதவா….

என்னதுங்க இது….

இது ஒரு வகையான ஹெல்த் டிரிங்க்….இத குடிச்சா உன் மனசுல இருக்குற பயம் போய்டும்…உற்சாகமா இருக்கும்…

அப்படியா அப்ப இத குடுங்க முதலில் என்று வாங்கி குடித்தான்…..அடுத்த ஐந்து நொடியில் மயங்கினான்…….காலைப்பொழுது வந்தது…மாதவன் கண் விழிக்கும் போது அவனது அறையில் இருந்தான்… நா எப்படி இங்க வந்தேன்…..எனக்கு என்ன ஆச்சு….

அப்பொழுது அங்க வந்த ஃபாதர் ஜான் மாதவனிடம் நேத்து நைட் நீ அந்த பங்களா-ல எதையோ பாத்து பயந்து மயங்கிட்ட-னு கனி சொன்னா மாதவா….இப்ப எப்படி இருக்க….

அப்படியா ஃபாதர் எனக்கு எதும் ஞாபகம் வரல-யே ஃபாதர்…….

நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு….எல்லாம் சரி ஆகிடும்…

சரி ஃபாதர் கனி எங்க….

அவ எங்கயோ வெளிய போய் இருக்கா பா…எனக்கும் தெரியாது..வேலைக்காரங்க தான் சொன்னாங்க…நீ தூங்கி ரெஸ்ட் எடு..கடவுள் என்றும் உனக்கு துணையா இருப்பார் மகனே….சரிங்க ஃபாதர் …..

(மாதவனுக்கு கனி-யின் மீது சந்தேகம் வந்தது…இவ நேத்து குடுத்த டிரிங்க் குடிச்ச பிறகு தான் நா மயக்கம் ஆனேன்….அப்ப இவ தான் ஏதோ கலந்து இருக்கா அதுல…ஆனா ஏன் அப்படி பண்ணா???எதுக்கு பண்ணா??? என்று சிந்தித்துக் கொண்டே இருந்தான்…)

(அந்திமாலை பொழுது மாதவன் குறுக்கும் , நெடுக்குமாய் நடந்துகொண்டு கனிக்காக வாசலில் காத்துக்கொண்டு இருந்தான்…அந்நேரம் கனி-யும் வருகிறாள்)

கனி காலை-ல எங்க போனீங்க…..இவ்வளோ நேரம் எங்க இருந்தீங்க……

பக்கத்து ஊரு-ல என் தோழி ஒருத்திய பாத்துட்டு வரேன்….

அப்படியா……???? (பக்கத்து ஊரில் எப்படி இவளுக்கு தோழி இருக்க முடியும் என சிந்தித்தவாறே அவளை உற்று நோக்கினான்….)

ஏன் இப்படி பாக்குற…..

ஒன்னும் இல்லைங்க…நா அங்க எப்படி மயக்கம் போட்டு விழுந்தேன் –னு யோசிச்சுட்டு இருந்தேன்…..ஓஓ அப்படியா…..

நேத்து அங்க ஒரு பெரிய சத்தம் வந்துச்சு நாம பேசிட்டு இருந்தப்ப….அதக்கேட்டு நீ மயங்கிட்ட….

அப்படியா…..சரி அங்க பேய் இருக்கானு கண்டுபிடிச்சிங்களா???????

எங்க நீ தான் மயங்கி விழுந்துட்டியே….அப்புறம் எங்க ஆராய….உன்ன இங்க கொண்டுவர நா பட்ட பாடு இருக்கே……….சரி அத விடு இன்னைக்கு நைட் போறேன் அங்க….நீ வரீயா?????

எதுக்கு இன்னைக்கும் எதும் கலந்து கொடுக்கவா என்று மனதில் நினைத்தவாறே மாதவன் கனியை உற்று நோக்கினான்….

என்ன வரீயா இல்லையா மாதவா??

சற்று சுதாரித்தவனாய் அய்யயோ நா வரல பா….எனக்கு பயமாய் இருக்கு ……
(இன்னைக்கு நீ யாரு-னு கண்டுபிடிக்குறேன் மிஸ்.கனி என்று மனதில் நினைத்துக்கொண்டான்)…..

சரி போ நானே போகிறேன்….

(கும்மென்ற இருட்டு….கனி தனியாக பேய் பங்களாவிற்கு செல்கிறாள்…அவளை பின் தொடர்ந்தே மாதவனும் செல்கிறான்….கனி மாதவன் ஐயா அறையில் ஏதோ தேடிக்கொண்டு இருக்கும் வேளையில்………..)

பேய்கள் பற்றி ஆராய்ச்சி பண்ண வந்த பொண்ணுக பீரோ-ல என்ன தேடுறீங்க……கனி திடுக்கிட்டாள்….மாதவா நீ யா???????ஆமா நானே தான்….சொல்லு நீ யாரு….எதுக்காக வந்து இருக்க…..எதுக்காக பொய் சொன்ன எங்க கிட்ட…..நான் என்ன பொய் சொன்னேன்?????அப்படியா நீங்க பொய்யே சொல்ல-ல அப்படி தான மிஸ்.கனி….சரி இந்த பீரோ-ல என்ன வேலை உங்களுக்கு???அது அது வந்து….என்ன பேய் பிடிக்குறீங்களா அங்க …..கனி திரு திரு வென்று முழித்தாள்….ஒழுங்க உண்மைய சொல்லு…இல்ல போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிடுவேன்…..இல்ல அப்படி பண்ணிடாத மாதவா……உண்மைய சொல்லிடுறேன்……..

நா தான் உன்னோட ஆளு…. என்னது என்ன சொல்லுற…மாதவன் ஐயா பொண்ணா???? இத நா எப்படி நம்புறது…..நம்ம சின்ன வயசுல நடந்த எதாவது சொல்லு நா நம்புறேன்…….நம்பித்தான் ஆகனும் இப்ப என்கிட்ட ஆதாரம் இல்ல நிரூபிக்க…….எனக்கு எட்டு வயசு இருக்கும் போது ஒரு விபத்து-ல என்னோட பழைய நினைவுகள இழந்துட்டேன்…ஆனா நான் தான் உன் மாங்கனி…….என்ன நம்பு……ஃபாதர் டேவிட் தான் எங்க அப்பாவோட நெருங்கிய நண்பர்….அவர் தான் என்ன இங்க இருந்து கூட்டிட்டு போய் என்ன வளர்த்தார்….அப்ப அவர்தான் என்கிட்ட என் கடந்த கால வாழ்க்கைய பத்தி சொல்லி உண்மைய கண்டுபிடிக்க இங்க கூட்டிட்டு வந்தாரு……ஒரு நாள் ஃபாதர் டேவிட் என்கிட்ட வந்து அவர் தான் என் அப்பா , அம்மா யாரு –னு சொன்னாரு…..உன்னோட அம்மா,அப்பா மர்மமான முறையில இறந்து போய்டாங்க….நீ தான் அந்த உண்மைய கண்டுபிடிக்கனும்….அதனால தான் உன்ன துப்பறியும் துறை-ல படிக்க வைத்தேன் உனக்கு உதவியா இருக்கும்-னு…உன்னோட முதல் கேஸ் உன் வாழ்க்கை பத்தினது தான்…..அந்த உண்மைய நீ தான் வெளிக்கொண்டுவரனும்…அப்ப தான் உன்னோட அப்பா,அம்மா ஆத்மா சாந்தி அடையும்-னு சொன்னாரு….அதுக்காக தான் இப்படி நாடகம் ஆடுனேன் மாதவா….அப்ப தான் நீ என்னோட பிரெண்ட்-னு சொன்னத ஃபாதர் கிட்ட அலைப்பேசி-ல பேசி கேட்டு கண்பார்ம் பண்ணிக்கிட்டேன்…அப்ப தான் நீ சரியா உள்ள வந்த…..யாரு என்ன குழப்பம் தீந்தது-னு நீ கேட்ட….இத தான் சீக்கெரட்-னு நா சொன்னேன் அன்னைக்கு…..உண்மை எல்லாம் கண்டுபிடிச்ச பிறகு உன்கிட்ட எல்லாம் சொல்லிடலாம்-னு இருந்தேன்…ஆனா அதுக்குள்ள உன்கிட்ட மாட்டிக்கிட்டேன்….சரி நா எப்படி மயங்கி விழுந்தேன்…???அத சொல்லு…அது நீ என் கூட அந்த வீட்டுக்கு வர மாட்ட-னு நினைச்சேன்…ஆனா நீ வந்துட்ட….உன்ன வச்சுட்டு என்னால எதையும் தேட முடியாது…..பேய் பத்தி ஆராய வந்தவளுக்கு வீட்டு-ல என்ன தேடுறானு சந்தேகம் வரும்….அதான் அந்த டிரிங்க்-ல தூக்க மாத்திரை போட்டு குடுத்தேன்…..நீ மயக்கம் ஆன பிறகு வீடு முழுக்க தேடுனேன்…அப்பதான் அங்க எனக்கு ஒரு தடயம் கிடைச்சுது…எங்க அம்மா அவுங்க குடும்பத்தோட இருக்குற ஒரு போட்டோ கிடைச்சுது….அந்த போட்டோ பின்னாடி இருக்குற அந்த போட்டோ கடை விலாசத்துல போய் விசாரிச்சேன்….அப்பதான் எங்க தாத்தா பத்தியும் எங்க அம்மா குடும்பத்த பத்தியும் தெரிஞ்சுகிட்டேன்….அன்னைக்கு என் தோழிய பாக்க போனேனு சொன்னேன் –ல இத பத்தி விசாரிக்க தான் போனேன்…அதான் அப்படி பொய் சொன்னேன்….அப்படியா கனி….அப்ப உங்க தாத்தாவ பாத்தியா கனி…. இல்ல மாதவா எங்க தாத்தா- வும் பாட்டியும் ஒருத்தருக்கு ஒருத்தர் குத்திக்கிட்டு இறந்து போய்ட்டாங்க….என்ன சொல்லுற கனி ….. ஏன் …. அங்க உள்ளவங்க சொன்னக்காரணம் எங்க அம்மா ஒடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதாலனு சொல்லுறாங்க…..ஆனா இதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கு……அது எப்படி அவுங்க சொன்ன மாறி இருந்தா எங்க அம்மா ஒடிப் போன அப்பவே செத்து இருக்கனும்….ஆனா அவுங்க இறந்தது ஏழு வருசம் கழிச்சு….அதாவது எங்க அம்மா அப்பா இறக்குறதுக்கு ஒரு மாசம் முன்னாடி…. இதுல ஒரு வேடிக்கையான விஷயம் இந்த ரெண்டு கேஸ்ஸையும் விசாரித்தது ஒரே போலீஸ் தான்….ஆனா அவரும் மர்மமான முறை-ல இந்த பங்களா-ல இறந்து போய் இருக்காரு….இதலாம் பாக்கும் போது யாரோ நல்லா புத்திசாலித்தனமாக பேய்கதை கட்டி எல்லாரையும் ஏமாத்தி இருக்காங்க……….அது யாரு-னு தான் இப்ப கண்டுபிடிக்கனும்…..

அப்ப பேய்-லாம் இல்லையா………அப்பா!!!!!!!!!!!!!! ஒரே நாள்-ல இவ்வளவு கண்டுபிடிச்சுட்டியா……சூப்பர் கனி…சொல்லி இருந்தா நானும் ஹெல்ப் பண்ணி இருப்பேன்…..

ஹ்ம்ம்….பேய்-லாம் இல்ல…சில மனித பேய்கள் சதி தான் இது…...உனக்கு சஸ்பென்ஸா இருக்கட்டுமே –னு சொல்ல-ல …..இப்ப என் சந்தேகம் ஒருத்தர் மேல தான்….ஆனா இப்ப அவர் எங்க இருக்காரு-னு தெரியல……

அப்படியா யாரு கனி அது???????????????

சொல்லுறேன்…அதுக்கு முன்னாடி நீ ஒரு வேலைப் பண்ணு….சொல்லு கனி…..கனி அவன் காதில் ஏதோ முனு முனுத்தாள்….

சரி கனி ஆனா உண்மைய சொல்லிட்டா உனக்கு எதும் ஆகிட கூடாதே….

அதுக்குலாம் பயப்படக்கூடாது இந்த உண்மைய நீ சொன்ன தான் அந்த எலி தானா வலை-ல விழும்….சரி கனி நாளைக்கே செய்யுறேன்….அப்ப தான் எனக்கும் அந்த துரோகி யாருனு தெரியும்…..மறுநாள் காலையில் மாதவன் ஊரில் உள்ள அனைவரிடம் கனி தான் மாங்கனி, மகேஷன் ஐயாவின் பொண்ணு-னு சொன்னான்….அன்று ஊர் முழுக்க அந்த பேச்சு தான்….

கனி நீ நினைக்குற மாறி வருவாங்க-னு நினைக்குறீயா????ஹ்ம்ம்ம்….பாப்போம்….முயற்சி பண்ணி தான் பாப்போமே…..அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலே வேலைக்காரன் வந்து கனி அம்மா உங்கள தேடி இரண்டுப் பேர் வந்து இருக்காங்க…..இருவரது விழியிலும் ஆச்சரியம் கலந்த ஆவலுடன் சென்று பார்த்தனர்….

தடித்த உருவம் பெருத்த வயிறு….பாக்க அப்படியே சினிமா வில்லனைப் போன்ற தோற்றம்….அவனுடன் ஒரு வாலிபன் …..

யாரு நீங்க?? நா தான் மா உன் மாமா அழகப்பன்….உங்க அம்மா கூட பிறந்த ஒரே உடன் பிறப்பு…இவன் என் பையன் மதி……உன்ன தான் இத்தன நாளா தேடிட்டு இருந்தேன் மா….அந்த கடவுள் அருளா-ல நீ எனக்கு கிடச்சுட்ட….நீ இங்க வந்து இருக்கனு ஊரு முழுக்க பேசிக்கிட்டாங்க….அத கேட்டதும் உன்ன பாக்கனும்-னு ஒடி வந்துட்டேன் மா….

இடையில் மாதவன் என்னெஅது ஒடி வந்திங்களா???அதும் இந்த உடம்ப வச்சுகிட்டா?? என்று அவரை நக்கல் அடித்தான்…..

ஹா ஹா…யாருமா இந்த தம்பி ரொம்ப நகைச்சுவையா பேசுதே…

சற்று சுதாரித்தவளாய் கனி பதில் அளிக்கின்றாள்..இப்ப ஞாபகம் வருது அம்மாவோட குடும்ப போட்டோ-ல பாத்து இருக்கேன் உங்கள்…...இவரு தான் என் பிரெண்ட் மாமா…இவருக்கும் இந்த ஊரு தான்…..

ஓ அப்படியா பாத்துமா…இது கிராமம்…சிட்டி இல்ல….இந்த தம்பி –யோட சேர்ந்து சுத்துனா தப்பா பேசுவாங்க…நம்ம குடும்பத்துக்கு-னு ஒரு பேரு இருக்கு…..அத நீ தான் காப்பாத்தனும் மா….

அழகப்பன் கூறும் போதே மாதவன் அவனை முறைத்துக் கொண்டு இருந்தான்…

சரி மாமா நா அதலாம் பாத்துக்குறேன்…

சரி மா….இனி நீ இங்க தங்க வேண்டாம் வா நம்ம வீட்டுக்கு போகலாம்……

வரேன் மாமா…ஆனா இப்ப இல்ல…ஃபாதர் வந்த பிறகு அவர்கிட்ட சொல்லிட்டு வரேன் மாமா….அதும் சரி தான் மா….சரி அப்ப மதி இங்க இருக்கட்டும்….அவனோட அங்க வா….

சரி மாமா….

நா கிளம்புறேன் மா…எனக்கு சில முக்கியமான வேலை இருக்கு…அத முடிக்கனும்…

அப்படி என்ன முக்கியமான வேலை மருமகள விட என்று கனி நக்கல் அடித்தாள்….

ஹா ஹா அத நீயும் பாக்கதான போற மா….சரி நா கிளம்புறேன்….

சரி மாமா…..

அவள் மாமவை வழி அனுப்பிய கனி ......ஹெலோ மதி…உள்ள போலாமா…மாதவா உன் கூட தங்க வச்சுக்கோ மதி-ய …

சரி கனி….போலாமா மிஸ்டர்.மதி …..

போலாமே….ஆமா கனி எப்படி மாதவா…

எப்படி-னா புரியல….

நல்ல பொண்ணா…எதும் காதல் அது இது-னு இருக்கா…நீ தான் அவ நண்பண் ஆச்சே நிச்சயமா உனக்கு தெரிஞ்சு இருக்கும்….

இல்ல எனக்கு எதும் தெரியாது என்று எரிச்சலாய் பதில் சொன்னான்…இதான் அறை…இங்க இருங்க இப்ப வந்துடுறேன்…..என்று வேகமாய் கனியை சந்திக்க சென்றான்….

என்ன கனி என்ன நடக்குது இங்க…

நீ அவுங்க கூட போக போறீயா??

அமைதி அமைதி மாதவா….எலி இப்பதான் நம்ம வலை-ல சிக்கி கிச்சு…..இனி ஒரு முடிவு தெரி்யும்….நீ எனக்கு ஒரு உதவி பண்ணு…என்ன கனி சொல்லு….கனி ஏதோ அவன் காதில் ஒதினாள்…

ஆனா இதுல உனக்கு ரொம்ப ரிஸ்க் அதிகமே…

அதுலாம் பாத்தா நமக்கு உண்மை கண்டுபிடிக்க முடியாது…அதான் நீ இருக்கீயே என்ன காப்பாத்த… மாதவன் கண்டிப்பா கனி என்று அன்பு கலந்த புன்னையுடன் கூறினான்…..அப்போது .....என்னது கண்டிப்பா மாதவா என்று மதி இடைமறித்தான்….

வா மதி அதுவா இன்னைக்கு நான் அந்த பங்களா வீட்டுல கடைசியா ஒரு ஆராய்ச்சி மட்டும் பண்ணணும் அப்ப தான் ஆவிகள் இருக்கா இல்ல கட்டுக்கதையா-னு தெரியும்….அத பத்தி பேசிட்டு இருந்தோம்…….

ஒ ஆமா அதுக்காக தான நீ இங்க வந்து இருக்க… சரி….நா அப்புறம் வரேன்…ஒரு முக்கியமான போன் பண்ண வேண்டி இருக்கு…சரி மதி….

மதி காரசாரமாக யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்தான்…அதை ஒட்டுக் கேட்ட மாதவன் கனி-யிடம் நம்ம பிளான் ஒர்க் ஆகுது கனி…சூப்பர்…சரி அவன் வரான்…நம்ம நாடகத்த தொடரலாம்….

இல்ல கனி நீ அங்க தனியா போக கூடாது…நானும் வரேன்…என்ன ஆச்சு மாதவா…பாருங்க மிஸ்டர்.மதி கனி தனியா இன்னைக்கு அந்த பங்களா வீட்டுக்கு போறேனு சொல்லுறா…..

ஓ இது தான் விஷயமா….கனி இன்னும் உன் ஆராய்ச்சி அங்க முடியல…சோ நீ தனியா அங்க போக கூடாது…நானும் வரேன்….சரி கேட்கமாட்டிங்களே ரெண்டு பேரும்..சரி மதி நீ என் கூட வா….இப்ப சந்தோஷமா மாதவா… ரொம்ப சந்தோஷம் என்று நக்கலாக சிரித்துக் கொண்டே சொன்னான் மாதவன்….

அன்று அம்மாவாசை……கும்மென்ற இருட்டு…..ஊரே நிசப்தமான அமைதியில் உறங்குகிறது…..கனியும், மதியும் பங்களாவிற்குள் நுழையும் வேளையில் கனியின் தலையில் யாரோ எதிர் பார்க்காத வேளையில் அடித்தனர்…அடித்த வேகத்தில் கனி மயங்கினாள்…அவள் கண் விழித்து பார்க்கையில் அவள் கைகள் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தாள்….அவள் அருகில் மருது நின்றிருந்தான்….நீயா என்ன அடிச்ச?????

ஆமா மாங்கனி…. நீ எதுக்கு என்ன கட்டி வச்சு இருக்க?????அத நான் சொல்லுறேனு ஒரு குறள்……என்னமா மருமகளே எப்படி இருக்க என்று வஞ்சகமாக நலம் விசாரித்தான்….மருது என் ஆளு…….நினைச்சேன்…நீ தான் எல்லாத்துக்கும் காரணமா இருப்ப-னு….உன்ன-லா என் மாமா-னு சொல்ல கேவலமா இருக்கு….எதுக்காக என் அப்பா,அம்மா –வ கொன்ன??? பரவாயில்லையே என் மருமகளுக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சு இருக்கே டா மருது….ஆமாங்க ஐயா….எனக்கு என்ன ஆசையா உன் அம்மா அப்பா-வ கொல்ல….ஒடிப்போனவ ஒரேடியா போகாம எங்க அப்பாவ பாக்க ஒரு நாள் வந்தா அவ புருஷனோட உன்னோட…. அப்ப எல்லாரும் சமாதானம் ஆகி ஒன்னு கூடிட்டாங்க…அதனால நஷ்டம் எனக்கு தானே மருமகளே….என் அப்பா-க்கு என்னைப் பிடிக்காது…நா கொஞ்சம் அடிதடி தொழில் பண்ணுறேனு…நா என்ன பண்ணட்டும் எனக்கு வரத தான தொழிலா செய்ய முடியும்..இது அந்த கிழவனுக்கு பிடிக்கள…அதனால என் சொத்தையும் உங்க அம்மா பேரு-ல எழுத போறதா கேள்விப்பட்டேன்….. ஒழுங்கா என் பேருல எழுது-னு சொன்னேன்…கேட்டானா........அதான் கிழவனையும் கிழவியையும் மேல அனுப்பிட்டேன்…அப்புறம் அத எனக்கு தெரிஞ்ச போலீஸ் காரன விலைகு வாங்கி தற்கொலையா மாத்திட்டேன்….இத காரணம் காமிச்சு அடிக்கடி அந்த போலீஸ்காரன் என் வீட்டுக்கு வரப்ப உங்க அம்மா அந்த விஷயத்தை கேட்டுட்டா….உங்க அப்பாக்கு என் மேல அப்பவே நல்ல அபிப்ராயம் கிடையாது….அத நா நல்ல யூஸ் பண்ணிக்கிட்டு அவுங்க ரெண்டு பேர்க்கும் சண்டைய ஏத்திவிட்டு ஏத்திவிட்டு பிரிக்குற அளவுக்கு கொண்டுவந்தேன்…ஆனா அதுக்குள்ள உண்மை தெரிஞ்சு உங்க அம்மா உன் அப்பா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா….உடனே வேற போலீஸ்-க்கு போன் பண்ணி கூப்புடுறதுக்குள்ள நாங்க போய் அவுங்க கதைய முடிச்சுட்டோம்….கொலைய தற்க்கொலையா மாத்திட்டோம்…….ஆனா அந்த வேலைக்காரன் சும்மா இல்லாம இந்த கேஸ்-ஸ பெரிய இடத்துக்கு கொண்டு போக பாத்தான்….அவனையும் தீத்துக்கட்டி ஒரு பொய் கதையையும், பேய் கதையையும் உருவாக்கி விட்டுட்டோம்…அப்ப தான் யாரும் இங்க இனி வரமாட்டாங்க-னு….உன்னையும் தீத்துக்கட்டலாம் –னு பாத்தேன்…அதுக்குள்ள உன்ன யாரோ தத்தெடுத்து கூட்டிட்டு போய்டாங்க-னு சொன்னாங்க… இல்லனா என்னையும் போட்டு இருப்ப அதான….அதே தான் என் மருமகளே….ஆனா நீ திரும்பி வருவ-னு கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல….

THAT IS YOUR BAD FATE MAMU என்று ஒருக் குறள் கேட்டது…..மதியும் அவனது தந்தையும் மிரச்சிக் கலந்த பார்வையில் மாதவனை நோக்கினர்….

நீயா??????????????????

நானே தான்டா குண்டா…….உங்கள மாமியார் வீட்டுக்கு அனுப்ப போலீஸ்-ஸ கூப்பிட போனேன்….சார் இவுங்க தான் குற்றவாளிங்க….அரேஸ்ட் பண்ணுங்க…..

கனி அவள் மாமனை நோக்கி என்ன முழிக்குற மாமா….உனக்கு மட்டும் தான் பிளான் போட தெரியுமா…..எப்படி எங்க பிளான்…அழகா உன் வாயா-லே உண்மைய ஒத்துக்க வச்சு அத ரெக்கார்ட் பண்ணி வசமா மாட்டிவிட்டோம்…. எப்படி எங்க பிளான்…..சூப்பர்-ல.....சும்மா சொல்லக்கூடாது நா நினைச்சதவிட அழகாக உன் வாக்குமூலத்த ஒத்துக்கிட்ட….நல்ல மூணு பேரும் ஜெயில்-ல போய் களி தின்னுங்க….இப்ப தான் எங்க அப்பா,அம்மா ஆத்மா சாந்தி அடையும் என்று கண் கலங்கினாள்….

கண்டிப்பா கனி….சொன்ன மாறி உண்மைய வெளிக்கொண்டு வந்துட்ட….என் அப்பா மேல இருந்த கலங்கம் இன்னைக்கு போய்டுச்சு……ரொம்ப தாங்க்ஸ்….

ஹெலோ என்ன தாங்க்ஸ்-ஸா….அடிவாங்க போற…இது என் கடமை….என் மாமனார் மேல ஒரு கலங்கம் –னா சும்மா விடுவேனா…..என்ன் சொன்ன மாமனாரா…….ஆமா நீ எனக்கு கணவன் ஆக போறனா உன் அப்பா மாமா தானா….கனி……..என்ன சொல்லுற….இன்னுமா புரியல மக்கு…உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறேன்….Reallyyyyy??????ஆமா என்று வெட்கத்துடன் ஒரு சிரிப்பு சிரித்தாள்…..நா நினைச்சுக்கூட பாக்கல கனி….ரொம்ப சந்தோஷமா இருக்கு….இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா??????ஹா ஹா……..என்ன அவசரம்….ஃபாதர் டேவிட்-க்கு போன் பண்ணி பேசி எல்லாத்தையும் சொல்லிட்டு அப்படியே நம்ம கல்யாணம் பத்தி பேசுவோம்….சரி வா போகலாம்….

___________________________________முற்றும்_________________________________________

எழுதியவர் : ரம்யா சரஸ்வதி (23-Jun-14, 7:59 pm)
பார்வை : 902

மேலே