ஏழையின் வாழ்க்கை போர்
கவிதையின் சூழல்:
ஒரு அடிமட்டமனிதகுலம் (அ) ஏழைகளின் வாழ்க்கை சூழலுடன் போராடும் ஒருவன் தன் வாழ்க்கை சூழலை பணக்கார வர்க்கத்தினரின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்ப்பதாய் அமைக்கப்பட்டது. எனவே இந்த க(வி)தையில் தமிழ்மொழியானது பேச்சு வழக்க மொழியாகவே அமைக்கப்பட்டுள்ளது.
கவிதையின் நோக்கம் :
இந்த க(வி)தை மக்களிடையே காணப்படும் ஏற்ற தாழ்வுகளை மையப்படுத்தி அமைக்கப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல..
இங்கே!
குவார்டரை குடித்தான்
குழியில் இறங்கி
மலக்கழிவை அகற்ற
குப்பை கழிவை நீக்க....
அங்கே!
குவார்டரை குடித்தும்
மீண்டும் குடிக்கிறான்
விருந்துக்காக - நண்பன்
விருந்துக்காக....
இங்கே!
இலவச அரிசிக்கு இருபது நாளு
காத்துக்கிடக்கிறான் உணவுக்காக
உண்ணும் உணவுக்காக....
அங்கே!
அறுபது ரூபா அரிசியகூட
வீசியெறியிரான் - திமிருக்காக
பணத்திமிருக்காக....
இங்கே!
உடுத்தக்கூட உடைகளின்றி
புள்ளைங்க தவிக்குது - பொட்ட
புள்ளைங்க தவிக்குது....
அங்கே!
ஒரு நாள் போட்ட
துணிகளையெல்லாம் தூரஎறியுது
வீணா வீசிஎறியுது....
இங்கே!
கவர்மெண்ட்டு பஸ்சுக்கு
சீட்டு எடுக்க கஷ்டமா இருக்கு - காசு
கஷ்டமா இருக்கு....
அங்கே!
குளுகுளு பஸ்சுளையும் சுயமான காருலேயும்
சுகமா போகுது - காச
தண்ணியா அழிக்குது....
இங்கே!
குடிக்ககூட உப்பு தண்ணி இன்றி
வாழ்க்கை நடக்குது - எங்கள்
வாழ்க்கை நடக்குது....
அங்கே!
வியர்வையில் கூட
உப்பு இன்றி சொகுசா வாழுது
வாழ்க்கை இதமா போகுது....
இங்கே!
வேலைக்கு போயி மாடா உழைச்சா
அஞ்சு ஆயிரம் கிடைக்குது - மாசம்
வாடகையும், வட்டியும் சரியா வந்து
பணத்த புடுங்குது - எங்க
உசுர வாங்குது....
அங்கே!
வீட்டிலிருந்தே மனுசல ஏச்சி
சொகுசா வாழுது - பல
ஊர சுத்துது....
இங்கே!
மருத்துவ செலவுக்கு மாசம் நூறு
பணமே இல்லிங்க - புள்ளைங்க
நோயில சாகுதுங்க....
அங்கே!
வீடே பணமா வாழ்வே தேனா
வாழ்க்கை வாழறாங்க - அதில்
எங்க உசுர திங்குறாங்க....
உணர்வின் பாதையில்....
மணிசந்திரன்.