வெற்றியின் விலாசம்
உழைப்பை விதைத்து
உறுதியை வளர்த்து
வெற்றியை அறுவடை செய்யும்
வித்தையை கற்றுக்கொள்ளுங்கள் .........
வாய்ப்புகளை வரமாக்கி
வாழ்க்கையை வளமாக்கி
லட்சியத்தின் எல்லையை
எளிதாய் அடையுங்கள் ........
முரட்டுபாதையையும்
முழுமனதாய் ஏற்று
முயற்ச்சி அதனை
விடாமல் தொடருங்கள் .........
தோல்விகளோடு துவண்டுவிடாமல்
துணிச்சலோடு போராடுங்கள்
வேகத்தோடு விவேகமும்
இருக்கட்டும் .......
சறுக்கல்கள் பலவந்தாலும்
சட்டென நில்லுங்கள்
விழுந்தால்தான் எழமுடியும் என்பது
வெற்றியின் வித்தை ........
காலத்தின் கட்டளையில்
கற்கலோடும் முற்கலோடும்
கடப்பதுதான் வாழ்க்கை .......
கத்துகிடந்தால் கணிகிடைப்பதில்லை
முயற்சியால் மட்டுமே முடியும்
வெற்றிக்கு அடிப்படை
விடமுயர்ச்சி மட்டுமே ........
உழைக்க தெரியாதவனுக்கு
உலகம் சொர்க்கமில்லை
விதைக்க மறந்தவனுக்கு
அறுவடை சொந்தமில்லை........