பசுமை கட்டிடம்

பசுமைக் கட்டிடம் என்பதன் பொருள்



சூழல் மீதும், கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் மீதும் ஏற்படக்கூடிய எதிர் மறையான தாக்கங்களைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் அல்லது முற்றாகவே இல்லாமல் செய்யும் நோக்குடன், பசுமைக் கட்டிட வடிவமைப்பு, கட்டுமானச் செயல்பாடுகள் என்பன தாங்கும் தன்மை கொண்ட (Sustainable) கட்டிடத்துக்குரிய இடத் (site) திட்டமிடல், நீர்ப் பாதுகாப்பு, நீர்ச் செயற்றிறன் (water efficiency), சக்திச் செயற்றிறன் (energy efficiency), பொருள்களினதும் வளங்களினதும் காப்பு (conservation) மற்றும் உள்ளகச் சூழற் பண்பு (Indoor Environmental Quality) ஆகியவை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன.

நல்லியல்புகள்

பசுமைக் கட்டிடங்கள் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் சிறப்பான தொழிற்பாட்டுத் திறன் கொண்டவையாக உள்ளன.

இவை சிறந்த செயற்பாட்டுத் திறன் கொண்டவை.
சக்தி மற்றும் நீர்ப் பயன்பாடுகளைப் பொறுத்தவரை அதிகரித்த செயற்றிறன் கிடைக்கிறது.
கட்டிடங்களுக்குள்ளே சுத்தமான காற்று, வசதியான வெப்பச் சூழல், பொருத்தமான ஒளியமைப்பு என்பன தொடர்பிலும் கூடுதலான செயற்திறனைப் பெறலாம்.
சிறப்பான கழிவகற்றல் முகாமைத்துவத்தைக்(waste management) கொண்டனவாக இருக்கும்.
கட்டிடங்களின் நீடித்த உழைப்பு, மற்றும் தேவையாயின் குடியிருப்பவர்களின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யக் கூடிய தன்மை என்பவற்றையும் பெற முடியும்.

எழுதியவர் : அருண் (26-Jun-14, 10:28 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 528

மேலே