செல்ல பூமி
தலையால் சுமந்தபோதும், தண்ணீர்
மேகத்துக்குச் சொந்தமில்லை,
மழையால் விளைந்தபோதும், காளான்
மழைக்குச் சொந்தமில்லை,
பூமிக்குத்தான் எத்தனை செல்வாக்கு
தென்றலின் வாசத்தில்
தேன்மலர் பூத்தாலும் - பூ
தென்றலுக்குச் சொந்தமில்லை !

