காலையில் பூத்து மாலையில் வாடும் மலருக்கு கூட உயிருண்டு

காலையில் பூத்து
மாலையில் வாடும்
மலருக்கு கூட
உயிருண்டு

அந்த உயிரினிலே
ஏதோ ஒரு
உணர்வுண்டு

மலர் தானே,
தாவிரத்தின் மகள்
தானே

என்றதை
அலட்சியம்
செய்யாதீர்
மனிதரே

மலருக்கு
மணம் இருப்பது
போலே, உணர்வும்
உண்டு

அதில் கொஞ்சம்
நெகிழ்வும் உண்டு

மலரை
மதியுங்கள்

அதன் உணர்வை
நம்புங்கள்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (27-Jun-14, 2:46 am)
சேர்த்தது : nimminimmi
பார்வை : 96

மேலே