திருவிழா
இவ்வளவு வருஷமும்
நல்லாதான் நடந்துச்சி
எங்க ஊரு திருவிழா !
சாமிக்கே திருஷ்டி வந்த கணக்கா
திருவிழா இந்த வருடம்
மூண்டது கோஷ்டி கலவரம் !
கடைசிவரை அடங்கவே இல்லை
இரு தரப்புக்குமே அதிகார பசி
வெட்டு குத்து வரை நீண்டது !
விஷயம் கேள்விப்பட்டு ....
ஊருக்குள் போலீஸ் நுழைந்ததும்
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது !
கலவரத்தோடு சேர்த்து
திருவிழாவுக்கும் ......!