என் கவிதையின் ராகம்

மன்றம் பொலிந்து வந்தது
தென்றல் !
தென்றலில் ஆடுது
தேன்மலர்கள் !
தேன்மலர்கள் சிந்துது
தேன்துளிகள் !
தேன்துளிகள் அருந்தி இசைபாடுது
வண்டுகள் !
வண்டுகளின் இசையில் பிறந்தது
என் கவிதையின் ராகம் !
----கவின் சாரலன்