ஆதரவற்ற மழலைகள் 555

அன்பு
மழலைகளே...

உறவுகள் இருந்தும் தனிமையில்
வாழ நினைக்கும்...

மானிடர்கள் பலர் இன்று...

உறவுகள் இன்றி தனிமையில்
வாழ்கிறாய் நீ இன்று...

தனிமை என்று
கலங்காதே கண்ணே...

உலகம் தனிமையில்
தவிக்கிறது...

உறவுகளை வெறுத்து...

உனக்காக துடிக்கும்
உன் இதயம் தான்...

உன் உறவு...

இறுதிவரை உனக்காக
துடிக்கும்...

நானும் உனக்கு
ஒரு நண்பன்தான்...

உனக்காக ஆயிரம்
சொந்தங்கள் உண்டு...

இந்த பூமியில்...

பகலில் உன் முகம் காண
ஓடிவரும் கதிரவன்...

இரவினில் உனக்கு தாலாட்டு
பாடும் வான் நிலா...

உன்னை எப்போதும் தொட்டு
செல்லும் பூங்காற்று...

நீ குளிக்க சங்கிலி தொடராய்
ஓடிவரும் வான் மழை...

என்னைவிட அழகா நீ என்று
பொறாமை படும் பூக்கள்...

உனக்காக இயற்கை அன்னை
இத்தனை தந்திருக்கும் போது...

நீ ஏன் கலங்குகிறாய்...

யார் சொன்னது நீ யாருமற்ற
அனாதை என்று...

நீ மண்ணில்
உதித்த நாளில்...

இயற்கை அன்னை உனக்காக
கொடுத்த அற்புதங்கள்...

நானும் இருக்கிறேன்
என்றும் உன்னோடு...

என் அன்பு கண்மணிகளே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Jun-14, 7:06 pm)
பார்வை : 110

மேலே