திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 8

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன். பாடல் எண்: 8

குறிப்புரை :

பொலிவினை உடைய மாயா நிருத்தம் புரிகின்ற பத்திரகாளியும் பூதபிசாசும் பொருந்திய மயானமே திருக்கோயிலாக உள்ளவன்.

சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாரிஷிகள் திரண்டு தவம் பண்ணுகின்ற ஆரணியத்தில் தனித்துத் தவம் புரிகின்ற தபோதனன்.

அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடி பத்தினிகள் பிச்சையிட வந்து அணையுமிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன்.

பொன்னால் செய்யப்பட்ட பாடக நூபுராதிகளைப் பாதங்களிலேயணிந்துள்ள கன்னியர் திரண்டு விளையாடும் புறவம் என்னும் திருப்பதியில் வாழ்கின்ற சிவன். புறவம் என்பதும் சீகாழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-14, 10:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே